மக்கள் செல்வன்

தென்மேற்குப்  பருவக்காற்றாய்  நீ  வீசத்  தொடங்கினாய்..
இன்று எத்திசைகளும் உன் மூச்சுக்காற்றை உணர்ந்திருக்கும்!

திரையுலகில் ஒருமுறை  முதலில் அறிமுகம் ஆனாய்..
அந்த அறிமுகம் ஒன்றே போதுமென்று நான்  நினைத்ததுண்டு..
ஆனால் ஒவ்வொரு முறையும்  பார்க்கையில் நீ யாரென்றே கேள்வியெழும்..
ஏனென்றால் நீ ஒவ்வொரு முறையும் பிறக்கிறாய்..
கதைக்கரு என்பதே நீ யார் என்பதை முடிவு செய்யும்..

நான் பீட்சா சுவை  உணரும் முன்பே உன் 
பீட்சா படம் பார்த்ததுண்டு..
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்னு தொலைந்த பக்கங்களைத்  தேடுனதுமுண்டு..
நீ சுந்தர பாண்டியனாய் இல்லாத போதும் ரசித்ததுண்டு..

சுமார் மூஞ்சி குமார் என்று
சொல்லி நடித்தாய்..
இன்று சுமாருக்கு இலக்கணம்
மாறிப் போனது..

காதல் பலமுறை கடந்து போனது
என் வாழ்வில்..
கதிரவன் மட்டும் கடந்து போகவில்லை இன்னும்!

துக்கம் எளிதில் மறையவில்லை இறைவி உன்னைக் கொன்ற பிறகு..
ஆனால் புரியாத புதிர் என்னவென்றால்
நீ ஒப்பாரிப் பாட்டுக்கு தர்மதுறையாய் ஆடிக்கொண்டிருப்பது!

இமைக்கா நொடிகளில் சில நிமிடம் மட்டும் இமைத்துச்  சென்றாய்..
இன்னும் மறக்க முடியவில்லை நீ இமைத்த அந்த நொடிகளை!

சிவந்த வானத்திலே எல்லாமே  கண்களுக்கு அழகு..
உன் கருமை முகம்தான் என்றுமே எங்களுக்கு இயல்பு!

வரிகள் என்றால் பெண்ணுக்கும் மண்ணுக்கும் என்றே பொதுவாகப்  பிறக்கும்..
இன்றே உணர்ந்தேன் உனக்காக  வரிகள் வேண்டுமென்று!
தென்மேற்கு உன்னைப்  படைத்ததால் மேற்குத்  தொடர்ச்சியைத் தந்திருக்கிறாய்!

எழுதியவர் : யுவராஜா (13-May-19, 11:05 pm)
சேர்த்தது : Yuvaraja
Tanglish : makkal SELVAN
பார்வை : 52

மேலே