தமிழாதமிழா
தமிழா...தமிழா..
15 / 06 / 2025
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தமிழா...தமிழா..
சிங்கத் தமிழா
நெஞ்சை நிமிர்த்தி செல்லடா
வஞ்சம் எதிர்த்து வெல்லடா
வங்கக்கடல் அலையோசை
நித்தம் தாலாட்டும் தமிழ்நாடே
முக்கடல் சங்கமத்தில் நாளும்
முத்து குளிக்கும் குமரி எல்லை
முத்தமிழ் சங்கம் கொண்டு
முத்தமிழ் வளர்த்த மதுரை மாநகர்
கொங்குத்தமிழ் இனிமையுடன்
பங்கு சந்தை ஆண்டிடும்
கோவை பெருநகர் புகழ் பாடி
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தமிழா...தமிழா..
சிங்கத் தமிழா
நெஞ்சை நிமிர்த்தி செல்லடா
வஞ்சம் எதிர்த்து வெல்லடா
நெல்லை அல்வாவென
இனித்திடும் தமிழ் பேசும்
அந்த மொழிக்கொரு கேடென்றால்
அறிவாளாய் வீரம் பேசும்
பாரதி தேசம் இது
வாடிவாசல் திறப்பதற்கு
வாடாமல் வெகுண்டெழுந்த
தானாய் சேர்ந்த கூட்டம் - இந்த
தமிழ்நாட்டின் தலைநகர் பெயர் கூறி
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தமிழா...தமிழா..
சிங்கத் தமிழா
நெஞ்சை நிமிர்த்தி செல்லடா
வஞ்சம் எதிர்த்து வெல்லடா
பேசியது போதும். அடங்கி அடங்கி
பொறுத்தது போதும்
தாய்க்கொரு பழியென்றால்
தமையர்களே தங்கைகளே
தட்டிக்கேட்க புறப்பட வேண்டாமா?
தன்மானம் இழந்து - நம்
தாய்மொழி மறந்து
உயிருடன் இருந்து என்ன பயன்?
உதிரம் கலந்த தமிழ் காக்க
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தமிழா...தமிழா..
சிங்கத் தமிழா
நெஞ்சை நிமிர்த்தி செல்லடா
வஞ்சம் எதிர்த்து வெல்லடா