உயிர்த்த ஞாயிறு

"ஈல மண்டலத்தில்
இனவாதக் கொசுக்கள்
உயிர்ப்புனலை உறிஞ்ச...
பேதுகையான மக்கள் பீதியில்
அங்கலாய்கிறார்களாம்"
"ஈலமண்டலத்தில் ஆயுதங்கள் உலா
வர...
அழிவுக்குரல் அடைக்கலம்
கேட்கிறதாம்"
"துச்சமான நச்சுக் காற்று சாமங்களில்
படர...
வைகறையும் வைரவலாக திகைக்கிறதாம்"
"ஈலமண்டல அரசாங்கத்தின் ஆடை நெகிழப்பட...
அதன் அங்கவீனம் மச்சம் போல புலப்படுகிறதாம்"
"ஊடகங்கள் நாளிதழில் சமாசாரமாக
சுழல...
நுகர்ச்சியை வேகவிட்டு வேடிக்கை பார்கிறதாம்"
"ஈலமண்டல மனுகுலத்தில் உவகை
எஞ்ச...
உயிர்த்த ஞாயிறின்
இராசகலகத்தால்
துயர்மழை வழிகிறதாம்"
"வெள்ளைச் சமூகம் வெளிறிப்போய்
சரணமாக....
கண்ணீர் இரவலனாக இறைவனோடு
மன்றாடுகிறதாம் "

எழுதியவர் : இஷான் (16-May-19, 11:20 am)
சேர்த்தது : இஷான்
பார்வை : 227

மேலே