வழி

போகாத பொழுதை போக்க
இறைவன் படைத்த

பொம்மை மனிதன் அவன்
போகாத

பொழுதை போக்க போய்
சேரும்

ஊருக்கு வழிதேடுகின்றான்

அவன் அறியாது காலம்

அவன் கைபிடித்து கொண்டு
சேர்த்து விடுகிறது

அதுதெரியாமலே அவனும்
போய் சேர்கின்றான்

யாரிடமும் சொல்லாமலே!

எழுதியவர் : நா.சேகர் (16-May-19, 5:45 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : vazhi
பார்வை : 22

மேலே