படைத்தல் ஒரு பரவசம்
ஒரு கதையை எழுதும் போது,
நான் பிரம்மன் போல உணர்கிறேன்.
ஆதி முதல் அந்தம் வரை –
எனது ராட்சியம் அது.
பாத்திரங்கள் என் விரலில் பிறக்க,
வழித்தடங்கள் என் எண்ணத்தில் திரும்ப,
பயணங்கள் என வசதிக்கு வளைந்து செல்ல –
அது போன்ற சுதந்திரம் வேறேதாவது இருக்குமா?
ஒரு பெண் – தன் கடைசி ஆசையைத் தேடி பயணிக்கலாம்.
ஒரு சிறுமி – பசியால் சிரிக்கலாம்.
ஒரு நிழல் – ஒரு கனவுக்கு உயிராகலாம்.
எந்த பாவமும் என் அனுமதியின்றி நடக்காது.
கூடுதலாக மன ஓட்டத்துடன்
Spotify-யில் என் கதை உலகத்துக்கும் perfectly match ஆகும் ஒரு BGM ஒலிக்கத் தொடங்கினால்
அந்த நிமிடம் நான் தான்!
இந்த பூமியில் உச்ச பாக்கியசாலி ♥️
- கௌசல்யா சேகர்