சவ்தாரி

சோசியர் ஐயா என் மனைவி மஷ்ரேஸ்வரிக்கு

இன்று காலை பத்தரை மணிக்கு அழகான


ஆண் குழந்தை பிறந்துள்ளது. நீங்க கொஞ்சம்


நல்லாப் பத்து குழந்தையின் எதிர்காலம் எப்படி


இருக்கும்னு சொல்லுங்க. அதோட அவனுக்குப்


புதுமையான, உலகத் தமிழர் யாரும் அவுங்க


குழந்தைக்கு வைக்காத பேரா வச்சுடுங்க.


@@@@@@@


தம்பி தங்ரேஷு இன்று ஞாயிற்றுக்கிழமை.



பத்தரை மணி ரொம்ப நல்ல நேரம். குழந்தையின்


எதிர்காலம் ரொம்ப சிறப்பா இருக்கும்.


வெளிநாட்டுக்குப் போயி வேலை பார்ப்பான்.


நீயும் உன் மனைவியும் அடிக்கடி வெளிநாடு போய்


வர்ற வாய்ப்பு ஏற்படும்.


@@@@@




இதை எல்லாம் காதுல கேட்கவே ரொம்ப


மகிழ்ச்சியா இருக்குதுங்க சோசியர் ஐயா. நான்


கேட்ட மாதிரியே எம் பிள்ளைக்கு புதுமையான


இந்திப் பேரை வச்சுடுங்க ஐயா.



@@@@@@


இன்னிக்குச் செய்தித்தாள்ல பார்த்த ஒரு பேரு


இன்னொரு பேரோட முடியற பேரு. அந்தப்


பேருக்கு என்ன அர்த்தம்னு தெரியல.


@@@@@@@


அர்த்தம் கெடக்குது விடுங்க சோசியர் ஐயா. அது



ஒரு பெரிய விசயமே கிடையாது. இந்திப் பேரா


இருந்தாப் போதும். தப்பித் தவறிக்கூடத் தமிழ்ப்


பேரை வச்சு கேவலப்படக் கூடாதுங்க ஐயா.


@@@@@@@@@@


நீ கேட்ட புதுமையான பேரு 'சவ்தாரி'.



@@@@@@


ஆஹா. அருமையான பேரு. நம்ம தமிழ் கவுதாரி


மாதிரி : 'சவ்தாரி' சுவீட்டு நேமுங்க ஐயா.


@@@@@@



சரி நல்லது. போயிட்டு வா. உன் தோட்டத்துக்


காய்கறிகள் ஒரு பை அனுப்பி வை.


@@@@@@@

சரி வர்றேனுன்ங்க ஐயா.

எழுதியவர் : மலர் (5-Jun-25, 7:14 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 15

மேலே