மனசாட்சி

நிலைக்கண்ணாடியின் முன் நான்
என்னைப் பார்த்துக் கொண்டிருக்கையில்
கண்ணாடி வாய்திறந்து பேசியது
' dhinamum unaaipaarkka நான் உன் அழகை
நீ பார்த்து மகிழ்ந்திட, , உற்று பார்க்கிறாய்
உந்தன் காரக்குழலில் அங்கும் இங்கும்
வெள்ளி நார்கள்போல் வெளிறிய முடி,
பார்த்து அலறுகின்றாய் மனதிற்குள் ,
' என்ன இந்த இளமையில் நான் முதுமை
எய்துவதா …….இல்லை...இல்லை ….'
இதோ, என் முன்னே மீண்டும் நீ ,
வெள்ளி நரை முடிகள் காணாது போக
ஏதோ ரசாயன மைக்கொண்டு மறைத்துவிட்டு
கோதிய கூந்தலை மீண்டும் பார்த்து
உன் அழகில் மகிழ்கின்றாய்...….ஆனால்
உனக்கு மட்டும்தான் இந்த நரையின்
ரகசியம் தெரியும் …….. எனக்கும் ,
நம்மிருவருக்கும் மட்டுமே ….. இன்னும்
உடலின் குறைகள் எப்படியோ அழகு
சாதனங்கள் கொண்டு சரி செய்து
உன்னை அழகு படுத்தி என்னெதிரே நிற்கிறாய்
உன்னைப் பார்த்து மகிழ்கின்றாய்....ஆனால்
உன் உடல் கூறுகளின் குறையை நீ மறைத்தாலும்
நான் அறிவேன்……. உன் நிலைக்கண்ணாடி '

அப்போது எனக்குள் இயங்கும் என் மனம்,
மனம் சொன்னது,' உன்னுள் இயங்கும்
நிலைக்கண்ணாடி நான் உன் சிந்தனைகள்
அத்தனையும் நீ உணர்ந்திட ',
தீயதோ நல்லதோ எது நீ செய்தாலும்
நான் அறிவேன் நீ மறைக்கமுற்பட்டாலும்,
நீ மறைத்து வாழ்ந்தாலும் இவற்றை உன்னுள்
உனக்கு காட்டிக்கொண்டே இருப்பவன் நான்
உன் மனசாட்சி, உள்ளத்து நிலைக்கண்ணாடி ,
நான் மட்டுமே உன்னை முழுவதும் அறிவேன்
என்னை நீ எதுகொண்டும் மறைக்கமுடியாது
உன்னை நீ திருத்திக்கொண்டு சீரான வாழ்வு
வாழ்ந்திட என்னைப்பார் …….உன் குறையை காண்
திருத்திக்கொள்ள ………...'


நான் உன் அகக்கண் திறக்கும் அகக்கண் .

என் பெயர்தான் மனசாட்சி.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (1-Jun-19, 5:05 pm)
Tanglish : manasaatchi
பார்வை : 318

மேலே