கரகாட்டம்…

கரகாட்டம்…!

சிரசில் கரகம் வைத்து ஆடிய
ஆட்டமெல்லாம் சிதைந்து
சிந்தையை கிரக வைக்கும்
ஆட்டமல்லவோ ஒவ்வொரு
ஆடி மாத திருவிழாக்களில்
அரங்கேறிக்கொண்டிருக்கிறது….!

அம்மன் வீதி உலா என்று
ஆரம்பித்த திருவிழா
அம்மனை பின்னிட்டு தள்ளி
அரைகுறை ஆடையோடு
அம்மனமாக ஆடி வரும்
இந்த மங்கைகளுக்கல்லவோ
பெருவிழா….!

வயது முதிர்ந்து உன் தந்தை
வயதில் உள்ளவர்களும் கூட
வயிற்று பிழைப்புக்கு ஆடுகிற உன்
வயிற்றை கிள்ளுவதற்க்காக அல்லவோ
வரிஞ்சி கட்டி கொண்டு
வரிசையில் நிற்கிறார்கள்…..!


பெண்ணையே பார்த்திராதது போல்
உன்னை பார்த்ததும்
இனிப்பு துண்டை வட்டமிட்ட
எறும்பு கூட்டம் போல்
இந்த இளைஞர் கூட்டம்
உன்னை சூழ்ந்து விட்டதே….!

வான வேடிக்கை போதாதென்று
வீதி வேடிக்கைக்காக ஆடி வரும்
இவளின் அங்கத்தை
தங்கத்தை போல்
உரசி பார்க்கும்
அன்பு தம்பிமார்களே….!

இவளும் நம்
தாயை போன்று
தங்கை போன்று
பெண் என்பதை
மறந்துவிட்டோமோ…!

வெறும் ஆட்டக்காரியாக மட்டும்
பார்த்து இரசிக்கிறோமே,
இவளுக்கும் பெண்மைக்குரிய
தன்மானம், வலி, வேதனை
உண்டென்பதை
நிதானிக்க வில்லையே….!

எழுதியவர் : ரகு மீஷாக். ஜ (1-Jun-19, 4:53 pm)
சேர்த்தது : ரகு மீஷாக் ஜ
பார்வை : 155

மேலே