வாழ்வில் உழைப்பும் பலனும்

ஓடும் நதியினிலே,
நீந்தியோடும் மீன்கள்,
நதிக்கரை வந்து சேர்ந்தான் ஒருவன்
கையில் தூண்டிலோடு மீன் பிடிக்க,
அங்கு வந்து சேர்ந்தது அப்போது
ஒரு மீன்கொத்திப் பறவை ;
அவன் தலைமேல் வட்டமிட்டப்படி;
அதன் பார்வையெல்லாம் நதியில்
ஓடும் மீன்களின் மேல்,
கீழும் மேலும் பறந்து வந்து
அப்படியே வானில் மிதந்து இருக்க
இவன் நீரில் போட்ட தூண்டிலில்
வந்து மாட்டியது மீன் ஒன்று
தூண்டிலை மேலிழுத்து மீனை
இவன் எடுக்கும் முன் முந்தியது
மீன்கொத்தி, கொத்தி சென்றது மீனை
இப்படியே இவன் மீனைப் பிடிக்க
கொத்திச் சென்றது மீன்கொத்தி
நொந்துபோய் இவன் தூண்டிலை
தோளில் போட்டு அங்கிருந்து நகர்ந்தான்
மீன்கொத்தியும் அங்கிருந்து எங்கேயோ
பறந்தோடிப்போனது ………….

இவன் மீன் பிடிக்க பிராயசிக்க
பிடித்த மீனை கொத்திச் சென்றது பறவை
இப்படித்தான் வாழ்க்கையிலும்
உழைப்பு ஒருவரது பயன் பெறுவார்
வேறெவரோ ஒன்றும் உழைக்காது!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (1-Jun-19, 9:37 am)
பார்வை : 190

மேலே