கீதா

இரவுகளால் தீக்குளிக்கும்
இந்த சொற்களிலும்
நீதான் இருக்கிறாய்.
கவிதை என்ற பெயரில்...

வாசிக்கிறாயா என்பதை
வாழ்கிறாயா என்று கேட்பேன்.

சாலையில் பிரிந்த வலி
சாவில் பிரிந்த உடலென
என் மரணத்தில் நெளிகிறது.

உன் உடைந்த குரலில்
உயிர் முறிந்த ரணம்
இந்த இருளிலும் கேட்கிறது.

ஊமையான நாட்களிலும்
குளிர்ந்த மொபைலில்
உறைந்து தவிக்கும் மனம்.

உன் தனிமையில்
சிதறிய கண்ணீரெல்லாம்
காலத்தின் கொப்புளங்கள்.

என் தனிமையோ
தீயிட்டு எனையே தின்னும்
காதலின் உப்பளங்கள்.

நமக்கின்றி போன நாம்
இனி யாரோவெனதானா

நமக்குள்ளும் நாம்?

எழுதியவர் : ஸ்பரிசன் (26-Apr-19, 8:56 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : geetha
பார்வை : 362

மேலே