தாங்காதடி இனிமேலும்

தாங்காதடி இனிமேலும்
**********************************************

வண்டூதிய மலரினங்கள் இதழவிழ்க்கும் தேன்சுவையாய்
உன்பேச்சு இருந்ததடி இத்தனைநாள் வரையில் !
சினங்கொண்ட தேளாக இன்றுநீ கொட்டியதேன் ?
ஏனோயிம் மாற்றம் நம்முறவுப் பாதையிலே
தாங்காதடி இனிமேலும் இந்நிலை தொடர்ந்திருக்க
மங்காத பொன்னொளியே மரகதச் சிலையழகே
பாங்காக வந்துருவாய் நம்காதல் மணந்திடவே !

எழுதியவர் : சக்கரைவாசன் (26-Apr-19, 8:09 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 346

மேலே