தொலைந்து போனவன்

திடுக்கிட்டு விழித்தேன்... நான் எங்கிருக்கின்றேன், நான் யார்... இது எந்த இடம், இங்கு எப்படி வந்தேன்...? எனக்கு தலையை வலிக்கின்றது, தன்னிச்சையாக என்னுடைய கரங்களால் தலையை அழுத்திக் கொண்டேன், கண்களுக்குள் ஒரு வட்டம் உருவாவது தெரிந்தது, நான் பின்னோக்கி படுக்கையில் சரிந்தேன்.

என் கண்களுக்குள் ஏதேதோ காட்சிகள், யாரோ ஒருவன் டிப் டாப்பாக உடையணிந்து, கம்பீரமாக அந்த சேரில் அமர்ந்து எதனையோ பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய முகமும் என்னைப் போலவே தோன்றியது... ஆனால் என்னால் ஒரு முடிவிற்கு வரமுடியவில்லை.., நான் கண்விழித்துப் பார்த்தேன் ஆனாலும் என்னால் எதனையும் அறிந்து கொள்ள முடியவில்லை, மீண்டும் தலைவலிப்பது போல் ஒரு உணர்வு இப்போதும் நான் மயக்கத்திற்குள் மூழ்குகின்றேன். என்னுடைய காதுகளில் யார் யாரோ பேசுவது தெளிவில்லாமல் கேட்டது.. யாரோ கேட்டுக் கொண்டிரு்தார்கள் இவர் யாரென்று தெரிந்ததா...?
இல்லை சார் யாரும் இவரைப் பற்றி எந்த தகவலும் கொடுக்கவில்லை, போலீஸ்லயும் எந்த கம்பளய்ட்டும் இல்லை சார் என்று கூறுவது காதுகளில் ஒளித்தது.
இவர் யார்...? காணாமல் போனவரென போலீஸில் ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்திடுங்க என்ற அந்த குரல் எனக்குள் எதிரொலிக்க ஆரம்பித்தது...

ஆம் நான் கண்டுபிடித்துவிட்டேன் என்னை... நான் தொலைந்து போனவன், சித்தம் தொலைந்து போனவன்... தீவிர சிந்தனையில், ஏமாற்றங்களின் பழுவை தாங்கமுடியாமல் சித்தம் தொலைந்து என்னையே தொலைத்தவன் நான்...

இப்போது நான்.... ஆம் "தொலைந்து போனவன்."

குறிப்பு:- சித்தம் கலங்கி திரிபவர்கள் இவ்வாறு தான் சிந்திப்பார்களோ என்ற கண்ணோட்டத்தில் எழுதப்பட்டது மற்றபடி எந்தவிதமான உள்கருத்தும் இல்லை

எழுதியவர் : சா.மனுவேந்தன் (19-Feb-20, 10:23 am)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : tholainthu poonavan
பார்வை : 258

மேலே