நதி, பெண், யானை
நீரில்லா வற்றிய நதியும்
மகப்பேறில்லா பெண்போல்தான்
என்று நண்பன் கூற நான் சொன்னேன்
நண்பா'' யானை இருந்தாலும் ஆயிரம் பொன்
இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள்'
அதுபோல, நீரோடும்போது நதி
அழகே, அதன் நீரும் வயலுக்கு
ஓடி சேரும்போது அந்த பச்சை
வயல்வெளிகளும் அழகே அழகு
நதி வறண்டால் என்ன, அதன் அடியில்
வற்றா ஜீவ நதியாய் ஓடுதே
'நிலத்தடி நீர் '...........
பெண்ணும் அவ்வாறே, குழந்தைப்பேறில்லை
எனில் மலடாகமாட்டாள் ஒருபோதும்
ஏனென்றால், அவள் இதயமெல்லாம்
அன்பு சுரக்கும் சுனை , அவள் என்றுமே
தாய்தான் மற்றோர்க்கு நல்நோக்குடையார்
கண்கள் இவ்வையகத்தில் உள்ளவரை