கலித்தாழிசை

கலித்தாழிசை...!!!
*******************
கொட்டிக் கிடக்கும் குளிர்வானில் மின்பூக்கள்
தொட்டுப் பறித்தவற்றைச் சூடிடவே ஆசைவரும்!
தொட்டுப் பறித்ததைச் சூடவாசை என்றாகில்
பட்டுக் கரத்தால் பறிக்காத தேன்தோழி?
பார்வையில் பட்டாலும் பாதையில்லை யேதோழி!!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Jan-19, 1:09 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 43

மேலே