இன்று இருப்பவர் நாளை
இன்று இருப்பவர்!
நாளை...?
ஒரு பரபரப்பான
நாள் கழிந்தது
சீக்கிரம் தூங்க சென்றேன்
பூமித் தாய்
அவசரமாக என்னைக் கடந்து சென்றாள்
என் கட்டில் வழியாக.
கடைசியாக எனக்கு நினைவிருக்கிறது அவளுடைய உறுமல்.
என் கட்டில்?
அது அவளின்
7.4 உறுமலில்
புதைந்து கிடக்கிறது
நானும் தான்.
சண்டியூர் பாலன்.