இவளின் புன்னகைபோல் விரியும் புத்தகமே

புத்தகமே உன்னை நேசிக்கிறேன்
இவளின் புன்னகைபோல் நீ விரியும் போது
புத்தகமே உன்னிடம் யாசிக்கிறேன்
இவளின் கவிதையையே நீ வழங்க வேண்டுமென்று
புத்தகமே உன்னை மூடிவைத்துவிட்டு
வானத்தைப் பார்த்து யோசிக்கிறேன்
பகலிலும் இவள் கனவாய் வருவாளா என்று ---