Raguvaran - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Raguvaran |
இடம் | : Srilanka |
பிறந்த தேதி | : 28-Oct-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 138 |
புள்ளி | : 89 |
கிழக்கிலங்கை தமிழன்
விடையறியா வினாக்கள்!
தடைகுறையா ஏமாற்றங்கள்!
கைநழுவிய வாய்ப்புகள்!
எள்ளி நகையாடும் இயலாமைகள்!
நிறைவேறா ஆசைகள்!
கறைபடிந்த காலங்கள்!
அத்தனையும் கடந்து ,
நான் போகின்றேன்!
ஒழிந்துபோன காலத்தை
கிழித்தெறிந்து,
பழிதீர்க்கப் போகின்றேன்!
உடலென்ற ஒன்றுக்காய்
ஒழிந்திருந்த காலம்
துளியும் எனக்கு இஷ்டமில்லை!
ஒளியை விழுங்கி ஏப்பமிட்டு
இருள் குடிக்கப்போகின்றேன்!
வெளிச்சத்தில் தொலைத்தவற்றை
பெருவெளியில் தேடப்போகின்றேன்!
மரித்துப்போன மனதுடன்,
மரத்துப்போன உடல்
தினம் நடத்தும் போராட்டங்கள்
இனியும் வேண்டாம்!
உடல் துறந்து உவகை தேடி
என் ஆன்மா பயணிக்கட்டும்!
உயிர்பற்றிருந்த நான்
உயிர் பற்றறுத்து
நீயும், நானும்..
நெடுஞ்சாலைப் பயணம்!
நீயோ..
உரிமையுடன் என் பின்னால்..
நானோ..
உச்ச மகிழ்ச்சியுடன் உன்முன்னால்..
பக்கக்கண்ணாடியில்
பாயும் என்பார்வைகளுக்காய்,
உன் உதடுகள்
உதிர்க்கும் புன்முறுவல்..
சந்தோசச் சாளரங்களை
அகலத்திறந்து விடும்..
பின்னாலிருந்து
எனை ரசிக்கும்
உன் பாசம் கண்டு,
நெடுஞ்சாலைகள்
நீண்டிடாதா என்று
நெஞ்சம் ஏங்கிநிற்கும்!
காலமெல்லாம் பயணிப்போம்..
கைபிடித்து களிப்புறுவோம்!
பெண்ணே!
உன் மூச்சுக்காற்று வேண்டும்!
பிரிகின்ற உயிரை
உனக்காக நிறுத்தி வைக்க.
அன்பே!
உன் தீண்டல்கள் வேண்டும்!
உறைகின்ற என் இதயம் அந்த வெப்பத்தில்
கொஞ்சம் உயிர்பிழைக்க!
கனியே!
உன் கண்கள் வேண்டும்!
என் விழி மூடும் வேளையிலே உன் பார்வை
எனை நோக்க வேண்டும்!
அமுதே!
உன் அழகு முகம் வேண்டும் : வேண்டும்!
நான் பிரியும் தருணம்
மீண்டும் மீண்டும் நான் பசியாற வேண்டும்!
என் உயிரே!
நீ வேண்டும் என்னருகில் எப்போதும்,
கரங்கள் கோர்த்தே நான்
கரைசேர வேண்டும்!
முத்தே!
நீ முழுதாக வேண்டும்!
முடியும் என் வாழ்வில் ஓளியாக வேண்டும்!
வேலிகள் உடைத்த வெறுமையாக வேண்டும்!
தடைகள் தகர்த்து
மடை கடந்த
பிள்ளைகளின் பார்வையிலே பெற்றவள் காண்பதும்,
பெண்மையின் பார்வையில் ஆண்மகன் உணர்வதும்,
தந்தையின் பார்வையில் தனயன் அறிவதும்,
சிந்தையில் புகட்டுமே ஆயிரம் வார்த்தைகள்!
ஆயிரம் வார்த்தைகள் சொல்லாத அர்த்தங்கள்
விழிகளின் மொழியிலே வெள்ளிடை ஆகிடும்!
உடல்மொழிக் கூற்றுடன் நேத்திரம் இணைந்திடின்
பொதுமொழி பிறக்குதே விழிகளின் கூடலில்!
எளியவன் பார்வையில் வலியவன் இராஜாங்கம்
இறைவனின் பார்வையே ஏழைக்கு அரசாங்கம்!
கூற்றுவன் பார்வையில் துளியில்லை ஒருபேதம்
வார்த்தையின் மரித்தலில் விழிபேசும் பலநாதம்!
கடைக்கண் பார்வையிலே காதலும் மொழிபேசும்
அரைக்கண் பார்வையிலே ஆடலும் அரங்கேறும்!
அரண்டவன் கண்களிலே க