பெண்ணே நீ வேண்டும்

பெண்ணே!
உன் மூச்சுக்காற்று வேண்டும்!
பிரிகின்ற உயிரை
உனக்காக நிறுத்தி வைக்க.
அன்பே!
உன் தீண்டல்கள் வேண்டும்!
உறைகின்ற என் இதயம் அந்த வெப்பத்தில்
கொஞ்சம் உயிர்பிழைக்க!
கனியே!
உன் கண்கள் வேண்டும்!
என் விழி மூடும் வேளையிலே உன் பார்வை
எனை நோக்க வேண்டும்!
அமுதே!
உன் அழகு முகம் வேண்டும் : வேண்டும்!
நான் பிரியும் தருணம்
மீண்டும் மீண்டும் நான் பசியாற வேண்டும்!
என் உயிரே!
நீ வேண்டும் என்னருகில் எப்போதும்,
கரங்கள் கோர்த்தே நான்
கரைசேர வேண்டும்!
முத்தே!
நீ முழுதாக வேண்டும்!
முடியும் என் வாழ்வில் ஓளியாக வேண்டும்!
வேலிகள் உடைத்த வெறுமையாக வேண்டும்!
தடைகள் தகர்த்து
மடை கடந்த
வெள்ளமாக நீ வேண்டும்!
எத்தனை வேண்டும்:; வேண்டும்?
தருவாயா?
மீண்டும் மீண்டும்
விலகாமல்
அத்தனையும் தருவாயா?
கடந்து செல்லும் நிமிடங்கள் கனவுகளில் கரையாமல்
நிஜமாக்கி தருவாயா?

எழுதியவர் : சதானந்தம் ரகுவரன் (17-Apr-23, 11:22 pm)
சேர்த்தது : Raguvaran
பார்வை : 382

மேலே