சுந்தரியோ மேனகையின் கைபவள மல்லியோ

சுந்தரியோ மேனகையின் கைபவள மல்லியோ
நந்தவனத் தில்நர்த் தனமாடும் மல்லிகையோ
வெண்ணிற முத்தாய் சிரித்திடும் முல்லையோ
விண்ணில் கதிர்வர பூத்துவரும் தாமரையோ
நந்தவனத் தின்சௌந்தர் யப்பூ மலர்களே
தந்தேன்இவ் வெண்பா வினை !

----பல விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (25-Jan-19, 9:17 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 37

மேலே