நல்ல காலம் பொறக்குமா
நல்ல காலம் பொறக்குமா??
தோற்றுப் போனோம்!இயற்கையை
தொழுது வேண்டும்
காலம் வருமோ?
ஆற்றில் வெள்ளம் வராமல்
அற்றுப் போகும்
காலம் வருமோ?
காற்றை விலைக்கு வாங்கி
உயிரைக் காக்கும்
காலம் வருமோ?
வேற்றுக் கிரகம் தேடியே
விரைவாய் ஓடும்
காலம் வருமோ?
நாற்றும் நடவும் இல்லையே!
உழவே நசுங்கும்
காலம் வருமோ?
சோற்றுக் கலையும் கூட்டமாய்
'சுமேலியா' ஆகும்
காலம் வருமோ?
மாற்று வழிகள் போதித்த
மாந்தரை மறந்த
காலம் வருமோ?
நேற்று நாட்களை எண்ணியே
நினைந்தே உருகும்
காலம் வருமோ?
மா.அரங்கநாதன்🙏