வீழ்ந்துவிட்டேன்
புங்கை மரத்தின் நிழலில்
புழுதி மணலில் சம்மணமிட்டு
அமர்ந்திருக்க
மொத்த மரமும் தரவியலாத
அச்சிறு களிப்பை அக்கிளை
வாரிக் கொட்டுகிறது
உடனே ஒரு கிளியாகவோ
புறாவாகவோ
குறைந்தபட்சம் ஒரு பட்டாம்பூச்சியாகவோ
மாறி பறந்து போய் உட்கார வேண்டும்
மாரி என்னும் நான் அக்கிளை தனில்
என் மனக்குரல் கேட்டுவிட்டது போல் அதற்கு
மெலிதாய் வீசிய காற்றில்
மிகுதியாய் அசைகிறது
இரு பெருங்கிழ இலைகளை உதிர்த்துக்
காலடியில் வீழ்த்தியது
விழ வேண்டியது நீங்கள் அல்ல
நான் தானென வீழ்ந்துவிட்டேன்
அவற்றின் அழகின் களிப்பில்