தாமரை

தாமரை
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

தண்ணீரில் மிதக்கும்போது
தாமரை மலர்கள் பலவிதம்
தரையில் நின்று பார்த்தால்
அதன் அழகே ஒருவிதம்!

வெண்தாமரையில் சுவடியுடன்
வீற்றிருப்பவள் கலைமகள்
செந்தாமரையில் சொர்ணமுடன்
அமர்ந்திருப்பவள் அலைமகள்!

தாமரை போன்ற முகம்
பெண்மையின் மென்மை
கவிஞர் கவிதை வரிகளில்
இதழ் விரிந்து மலர்கின்றன!

விண்ணிலே ஒரு வட்ட நிலா
மண்ணில் நீர் ததும்பும் ஏரியிலே
மலர்ந்த தாமரை இதழ்கள்
நடுவே மணக்கும் வட்ட நிலா !

தாமரை அழகில் மயங்கி
வண்ண மலர்களை வட்டமிடும்
வண்டுகள் தேன் அருந்தி
துயில் கொள்ளும் மலர்மெத்தை!

அங்கயற்கண்ணியின் தெப்பத்தில்!
ஆதவன் கதிர்கள்பட்டு மின்னி
மிதந்து வருகிறது பொற்றாமரை
மக்கள் கண்கள் கண்டு மலர்கின்றன!

கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி , ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

எழுதியவர் : பொன்விலங்கு பூ.சுப்ரமணிய (26-Feb-19, 11:45 am)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
Tanglish : thamarai
பார்வை : 146

மேலே