கவிமொட்டுக்கள்

குறிப்பு : 1993 ஆம் ஆண்டு எங்களது கல்லூரி ஆண்டு மலருக்கு எழுதிய கவிதைகளில் ஒன்று.

மீன் இனமே
உனக்கு யார் நீந்த
கற்றுக் கொடுத்தது...?
நீ....
எனக்கு கற்றுக்கொடு
வாழ்வில் எதிர் நீச்சல்
போடுவதற்கு.....

"நீர்க்கசிவு"

கல்லே ஏன் அழுகின்றாய்...?
மக்கள் "பெருவெள்ளம்"
" பூகம்பம்" என்ற அரக்கர்களால்
பாதிக்கப்பட்டார்களே என்றா...?

எழுதியவர் : சா.மனுவேந்தன் (28-Feb-19, 8:43 am)
சேர்த்தது : மனுவேந்தன்
பார்வை : 263

மேலே