அருவியே

அருவியே! நீ....

கம்பீர
மலைராஜனின் வெள்ளை
இளவரசி!

நீர்ச்சிதறல்
தூவும் சாரல்
வெண்மேகம்!

கரும்
பாறைகள் அணியும்
வெள்ளி ஆபரணம்...

காடுகளின்
ஜீவராசிகள் பருகும்
பால் அமுதம்...

நதி
தலை துவட்டும்
நீர் கூந்தல்...

சருகுகள்
விளையாடும்
சறுக்கு மரம்...

அருவியே
உன்னை உயிரில்லா
அக்றினையில் சேர்ப்பது தவறு..

காடுகளின்
பள்ளமேடுகளில் கணைத்து
பாய்ந்தோடும் வெண்புரவி... நீ!

எழுதியவர் : சிவா. அமுதன் (1-Mar-19, 8:50 pm)
சேர்த்தது : சிவா அமுதன்
பார்வை : 353

மேலே