குற்றேவல் தொடரும்

குற்றேவல் தொடரும்....!

பிள்ளை பிறந்தது!
பெருமகிழ் வந்தது!
அள்ளி அணைத்ததால்
ஆனந்தம் தந்தது!
பள்ளி சென்றது!
பலவும் கற்றது!
மெள்ள நகர்ந்து
மேல்படி முடித்தது!
கொள்ளை அழகாய்
குடும்பம் அமைத்தது!
வெள்ளை மனது
பிஞ்சுகள் பிறந்தன!
'புள்ளி' தான் என்ற
புகழும் கிடைத்தது,
வெள்ளை முடிவந்து
விழுந்தது! வீழ்ந்து
கொள்ளி வரும்வரை
குற்றேவல் தொடரும்....!

மா.அரங்கநாதன்

எழுதியவர் : மா.அரங்கநாதன் (23-Jan-19, 10:50 pm)
சேர்த்தது : மாஅரங்கநாதன்
பார்வை : 63

மேலே