புது நேசம்

புது நேசம்

அலைபேசி வார்த்தைகள்
காற்றோடு போக
கண்டால் "அன்பே"
சென்றாள் பின்னே
சலனங்களே சாகாமலே
சீற்றம் குறையாத நளினங்கள்
கண்ட இடங்களில் கண்கள் மேய
ஒதுங்கி நின்று கைகள் சேர
விலைபேசி விற்கும் தாபங்கள்
விரதம் கலைய பரிதாபம்
சகவாசம் சரியில்லை
நேசம் நேர்மையில்லை
மாய வலையில் மான் பிடித்தாயிற்று
விலகாத மனவிலங்கு வேண்டும்
தவறுகள் சரியாக
நியாயம் தீர்க்கும்
வாதம் வேறு
ஒடுங்கிய இதயம்
ஓராண்டு தாங்குமா?
புது நேசம்.

எழுதியவர் : பர்வின்.ஹமீட் (23-Jan-19, 10:11 pm)
Tanglish : puthu nesam
பார்வை : 180

மேலே