குடியரசு நாள்
குடியரசு நாள்.
26-01-2019.
அறிஞர் பெருமக்கள்
அதிக முறை கூடி
அலசி ஆராய்ந்து
அமைத்த சாசனம்!
அரசியல் சட்டம்!
குடியரசு நாள்!
நாமே நமை ஆள
நடைமுறைக்கு வந்த நாள்!
உலக நாடுகளில்
ஒப்பற்ற நாடு!
பெரிய குடியரசென
பேர் பெற்ற நாடு!
காரணமே அதன்
பன்முகத்தன்மை!
ஒருமுக மாக்கினால்
ஒருபோதும் நிற்காது!
சொல்லப் போனால்
பல்மணி மாலை!
மணிகள் சில பல
குறையும் சேரும்
நூலை அறுத்தால்
சிந்தும் சிதறும்!
நூலாம் குடியரசை
நூறுமுறை போற்றுவம்!!
மா.அரங்கநாதன்🙏