தேவரைத் போலத் தொழுதெழுக – ஆசாரக்கோவை 17
இன்னிசை வெண்பா
அரசன், உவாத்தியான், தாய்,தந்தை, தம்முன்,
நிகரில் குரவரிவ் வைவர்; இவரிவரைத்
தேவரைத் போலத் தொழுதெழுக என்பதே
யாவரும் கண்ட நெறி 17
- ஆசாரக்கோவை
பொருளுரை:
அரசன் (தலைமை ஆட்சியாளர்), ஆசிரியன், தாய், தந்தை, தனக்கு முன்னே பிறந்த மூத்தோன் என இவர்கள் தமக்கு நிகரில்லாத பெரியோர்களாவர். இவர்களைத் தெய்வம் போலத் தொழ வேண்டும் என்பது யாவராலும் வரையறுத்துக் கூறப்பட்ட நெறிமுறையாகும்!