நறுந்தண்கார் மெல்ல இனிய நகும் - கார் நாற்பது 14

இன்னிசை வெண்பா

செல்வம் தரல்வேண்டிச் சென்றநம் காதலர்
வல்லே வருதல் தெளிந்தாம்;-வயங்கிழாய்!
முல்லை இலங்கெயி(று) ஈன, நறுந்தண்கார்
மெல்ல இனிய நகும்! 14

- கார் நாற்பது

பொருளுரை:

விளங்குகின்ற அணிகளையுடையாய்! முல்லைக்கொடிகள் விளங்குகின்ற மகளிரின் பற்களைப் போலும் அரும்புகளை ஈனும் வகை நல்ல குளிர்ந்த மேகம் மெல்ல இனியவாக மின்னாநின்றன; ஆதலால், பொருள் தேடிக் கொள்ளுதலை விரும்பி பிரிந்து சென்ற நமது தலைவர் விரைந்து வருதலை தெளிய அறிந்தாம்!

எயிறு போலும் அரும்பினை எயிறென்றார்! இஃதிப்பொருட்டாதலைப் ‘பொலனறுந் தெரியல்' என்பதானும் அறிக!

எழுதியவர் : மதுரைக் கண்ணங் கூத்தனார் (6-Sep-25, 8:18 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 7

மேலே