தைப்பொங்கல்
முற்றங்களை நிரப்புகின்ற வண்ண கோலங்கள்....
நிலைப்படி சாமரமாய் அசைகின்ற
மாவிலைத் தோரணம்...
அடிகள் ஆறிலும் தித்திப்பு தெவிட்ட
கரும்புகள்...
நறுமணப் புட்டிகள் தோல்வி காணும்
மஞ்சள் கிழங்குகள்...
இன்று வரை மாற்று காண ருசியுடன்
பனைங்கிழங்குகள்...
புதுவெல்லமும் நெய்யும்
பச்சரிசியுடன் சங்கமித்து
பொங்கிய பொங்கல்...
ஆடை புதிது உடுத்தி
ஆதவன் முன் படைத்து
அனைவருக்கும் பகிரப்பெற்றது
பொங்கலும்!!
பொங்கல் வாழ்த்துக்களும்!!!