இசை

அங்கு மழைபெய்து
வருடங்கள் இரண்டு
உருண்டோடி விட்டும்
இன்னும் மழைக்கு
அறிகுறிகள் ஏதும்
இல்லாது போக
ஊர் நல் மக்கள் கூடி
ஆலோசித்து பக்கத்துக்கு ஊர்
கண்ணன் ப்ரேமியை
அவ்வூர் கண்ணன் கோவில் முன்னே
மழைக்குறித்தோர் வேள்விபோல்
இசைக்க கச்சேரி செய்ய அழைத்தனர்
ஆனாலும் வந்தது - இசை மேதை
கண்ணன் ப்ரேமி பாட ஆரம்பித்தாள்-கச்சேரி
கணபதி வணக்கத்தில்
அம்சத்தவனி ராக கீர்தனையில் ஆரம்பம்,
மூன்றாவது பாட்டு, ராகம் அமிர்தவர்ஷினி..
இந்த ராகத்தில் அவள் ஆலாபனை
விஸ்தாரமாய் செய்து.....'ஆனந்தா
அமிர்த வர்ஷினி.. என்றால்... இரு முறை
மூன்றுமுறை...... நிரவலுடன்....பாட்டோடு
இளைந்துவந்தமர்ந்தது விண்ணில் இப்போது
எங்கிருந்தோ வந்த கருமேக கூட்டங்கள்
இதோ கண்ணன் ப்ரேமி ஸ்வரங்கள் போட்டு
பாடி, அந்த பாட்டிற்கோர் முடிவு தர
அந்த பாட்டில் மயங்கிய இந்திரா தேவன்
கண் திறந்தான், மகிந்தன், ஆனந்த
கண்ணீர்விட்டான், அந்த அற்புத இசைக்கு
அமிர்தவர்ஷினி ராகத்திற்கு..................
கொட்டோ கொட்டு என்று கொட்டியது
இரண்டு வருடம் பெய்யாத மழை
மா மழையாய், அவ்வூர் மக்கள் எல்லாம்
ஆச்சரியத்தில் மூழ்கி இருக்க
கச்சேரி முடிந்தது ......கண்ணன் ப்ரேமி
கோவிலில் உறையும் கண்ணபிரானுக்கு
நன்றி தெரிவித்தாள்.... தன குருவிற்கும்

இசை தெய்வீகமானது ..... நல்லவர்
பாட வேண்டியதை தந்திடும்
காமதேனு இசை ..... இசைக்கு நிகரேது
இம்மண்ணில் ......................,

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Jan-19, 8:44 pm)
Tanglish : isai
பார்வை : 61

மேலே