விழிப்புணர்வு

ஊரெல்லாம் உறங்கையில்
விழித்திருக்கும் உலகில்
உறங்க மறுக்கும் உள்ளங்களும்..

இயற்கையின் பிடியிலா
இடர்களின்பிடியிலா மக்களின்
குழப்பங்களின் குழபத்தினாலா

பொன்மயமான எதிர்காலம்
பாழாய் பனிபோல் கரைந்து
விரைவாய் கடந்து செல்கிறது

கடந்து செல்லும் ஒவ்வொரு மணித்துளியும்
ஏக்கமும் தாக்கமும் விடுத்திடும் விடையே
சிந்தித்துப் பார்க்கும்பொழுது..

மனிதனுக்கு விழிப்புணர்வு வேண்டும்
பிறர் அன்பு வளர வளர்க்க முனைவோம்
முனைவோம் முத்தான வாழ்வு பெற்றிட

எழுதியவர் : பாத்திமா மலர் (4-Dec-24, 12:44 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : VILIPPUNARVU
பார்வை : 26

மேலே