முழுதாய் பெறுவோம்

முழுதாய் பெறுவோம்.
04 / 12 / 2024

பூமியை மறந்த சாமியும் இல்லை
சாமியை மறந்த பூமியும் இல்லை
பூமியும் சாமியும் மாறுவது இல்லை
மாறும் ஆசாமிதான் தினம் தொல்லை
உன்னிடம் இருப்பது என்னிடம் இல்லை
என்னிடம் இருப்பது உன்னிடம் இல்லை
உனக்கும் எனக்கும் புரிதலும் இல்லை
இருப்பதை பகிர்ந்திட மனமும்தான் இல்லை
பிறக்கும் போது யாருடன் பிறந்தோம்?
இறந்த பின் நாம் யாருடன் போவோம்?
பிறந்து வாழ்வினில் தனியாய் உழன்றோம்.
உழன்று முடித்து தனியேதான் போவோம்.
உண்மையை உணர்ந்து உள்ளதை பகிர்வோம்
உள்ளத்தை எப்பவும் மழலையென வைப்போம்
இயற்கையை நாளும் இனிதாய் ரசிப்போம்
இறையின் அருளை முழுதாய் பெறுவோம்.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (4-Dec-24, 8:25 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : muluthai peruvom
பார்வை : 177

மேலே