நெஞ்சே எழு

நெஞ்சே எழு
---------------
நேர்மை கொண்டு
புதுப்புதுப்புனலாடி
புதுமைப்பெண்ணாய் இந்த
பூமிப்பந்தில் உலாவர
நெஞ்சே எழு.....

சாதி எனும் சாக்கடை
ஆலகால விடமாய்
அனுதினமும் நம்மை கொல்லும்
அற்பசாதி அறுத்திடும்
அகண்டகத்தை வேரோடு
களைக் கொல்லிகளை
உரம் போட்டு வளர்ப்பதா
பிணந்திண்ணி கழுகுகளை
புறம்தள்ளி மிதித்திட
நெஞ்சே எழு...

வற்றிய வயிறோடு
வறுமைக்கு அடிமையாகி
கையேந்தும் மனிதத்தை
நேசக்கரம் நீட்டாமல்
வஞ்சித்திடும் நரிகளை
சாட்டை கொண்டு ஒடுக்கிட
நெஞ்சே எழு...

காலம் மென்று மென்று
நம்மை விழுங்கும்
காணாமல் போகும் வாழ்க்கை
விதைத்த விதைப்பில்
விதைப்பவன் எங்கே உறங்குவது
நெஞ்சே எழு...

எழுதியவர் : உமாபாரதி (3-Nov-18, 6:16 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : nenjay elu
பார்வை : 272

மேலே