அறியாதவன், புரியாதவன்

ஒரு (செக்) தாள் கொடுத்தேன்
பணம் கொடுத்தார்,
இது வங்கி என்றார்.

ஒரு பொருள் எடுத்தேன்,
பணம் கேட்டார்,
இது கடை என்றார்.

கை எடுத்து கும்பிட்டேன்,
பணம் வை என்றார்,
இது கோவில் என்றார்.

அத்தனையும் காண்பித்தார்கள்,
எப்படி இப்படி என்றேன்,
இது சினிமா என்றார்கள்.

எடை நிறைந்த பை சுமந்து,
சிறுவர்கள் சென்றார்கள்,
இவர்பகள் பள்ளிக் குழந்தைகள் என்றார்கள்.

தெரியக்கூடதவை தெரிய
உடை அணிந்து சென்றார்கள்,
இதுவே இன்றைய நாகரிகம் என்றார்கள்.

எழுதியவர் : arsm1952 (3-Nov-18, 5:47 pm)
சேர்த்தது : arsm1952
பார்வை : 119

மேலே