காளிங்கன் மேலாடுங் கால்
காளி தலைகவிழ கால்நடம் செய்தவர்யார்?
காளையார் என்று கதைப்போரே -கேளுங்கள்
காளி தலைகவிழ கண்ணனே செய்திட்டான்
காளிங்கன் மேலாடுங் கால்
காளையார் -சிவனார்
காளி தலைகவிழ செய்தவர் சிவன் ஆம் தில்லையில் ஊர்த்துவத்தில் காளியை வென்றார்
கண்ணனும் காளிங்கன் என்ற காளி தலைகவிழ காளிங்க மர்த்தனம் செய்தானே அவனும் காளி தலைகவிழச் செய்தவன் தானே