விவேக்பாரதி - சுயவிவரம்

(Profile)தமிழ் பித்தன்
இயற்பெயர்:  விவேக்பாரதி
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  22-Oct-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-May-2013
பார்த்தவர்கள்:  1258
புள்ளி:  1924

என்னைப் பற்றி...

தாய் :

சேயெனக் கன்னையாய்ச் சேர்ந்தநற் றோழியாய்த்
சாயெனத் தோள்தரும் சாமியாய் - ஆயினாள் !
சானகி என்பாள் சகிக்கும் குணம்மிக்காள்
தேனுறும் சொல்மொழிவாள் தேர்ந்து !


தந்தை :

முன்னாள் கடற்படையில் முந்திப் பணிபுரிந்த
என்னருந் தந்தை எனக்கேற்றம் ! - மன்னவனாம்
சீனிவாசன் பேரையே சீராய்த் தரித்தவன்தான்
வானின்நீர் போல்பொழிவான் வாக்கு !

இளவல் :

இளவ லுடையேன் இழிவெதற்கு மஞ்சேன் !
உளமே நிறைந்த உயிராய் - விளங்கிடுவான் !
ஸ்ரீவத்ஸ் என்கின்ற சீர்பெயரான் ! புன்னகைத்தால்
பூவர்க்கம் நாணும் புரிந்து !

நான் :

மீசை முளைத்து மிளிர்வதற்குள் செந்தமிழ்மேல்
ஆசை வளர்த்திட்ட ஆண்பிள்ளை - பேச
நினைப்பதெலாம் நேராக நின்றுரைப்பேன் ! வீட்டில்
எனையழைப் பார்விவேக் என்று !

கவிதை :

பொன்னையும் பெண்ணையும் போகும் பணத்தையும்
தன்னையும் காதலிக்கும் தாரணியில் - என்றனையே
காதலிக்கு மோருறவு ! கன்னி உருவென்பேன் !
பூதலத்தில் என்றும் புதிர் !

பெயர்க்காரணம்

கவித்தகப்பன் பேரைக் கடுகியென்பேர் பின்னால்
கவினழகாய்ச் சேர்த்ததே காண்க ! - கவியெழுத
அன்றன்னான் பாக்கள்தாம் ஆகியதே தீப்பொறியாய் !
நன்றிக்கே யிப்பேர் நவில் !

சரண் :

நாற்கவி கற்று நயமாய்க் கவியுறைக்கப்
போற்றினேன் சக்தியவள் பொற்பாதம் - ஆற்றுகிறாள்
என்னு ளிருந்தே எழுதுகிறாள் ! என்வாழ்வே
அன்னை யளித்த அருள் !

என் முகநூல் கணக்கு

www.facebook.com/vivekbharathi007

என் படைப்புகள்
விவேக்பாரதி செய்திகள்
விவேக்பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Sep-2017 11:24 pm

காதுவழி கீதமெனும் காட்டுமலைத் தேனெடுத்து
மோதவந்து ஊட்டி விட்டவன் - பெரும்
மோனநிலை காட்டி விட்டவன் !! - குளிர்
சீதமிகு காதலிலும் சீறும்ஞானப் பாடலிலும்
போதனைகள் தந்து சென்றவன் - பொழுது
போக்குக்காக வானம் வென்றவன் !!
ஆதரவாய்ப் பேசியிருள் சாகரம் அழிந்துவிடப்
பாதைபோட்டுத் தான் நடந்தவன் - அந்தப்
பரமசக்தி நிழல் சுமந்தவன் ! - ஒளி
ஆதிநெருப் பாகிவந்து ஜோதிநெருப் பாய்வளர்ந்து
வீதிநெருப் பான பாரதி ! - அவன்
விந்தைதமி ழுக்குச் சாரதி !

புத்தம்புது சிந்தனைகள் புயலளவுக் கர்ஜனைகள்
நித்தநித்தம் செய்து பார்த்தவன் - வாழ்வின்
நிதர்சனத்தால் கொஞ்சம் வேர்த்தவன் - ஈட்டி
குத்தவந்த வேளையிலு

மேலும்

அணுவணுவாய் தமிழ் மனங்களை ஆள்கிறான் முண்டாசுக் கவிஞன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Sep-2017 10:44 am
விவேக்பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Sep-2017 4:42 pm

தந்தந் தனதந் தனன தனனதன
தந்தந் தனதந் தனன தனனதன
தந்தந் தனதந் தனன தனனதன - தனதானா
தத்தத் தனதத் தனன தனனதன
தத்தத் தனதத் தனன தனனதன
தத்தத் தனதத் தனன தனனதன - தனதானா !

என்றன் மனதும் நினது திருவடியி
லென்றும் திகழும் அழகு மலரெனவு
மங்கங் கொளிரும் அரிய பெருமைதனை - அடையாதோ ?
அற்பக் கடலுக் கடியி லுளமுமுற
இக்கட் டறவக் கடலி லிருளகல
அக்னிப் பொருளுக் கழுகு மழலைமொழி - அறியாயோ ?
மன்றம் புகழும் அழகு மொழி,கவிதை
நெஞ்சம் நிறையும் வகையில் நினதுபெயர்
பொங்கும் அறிவும் திறனு மெனையணுக - விடுவாயே !
பொற்பட் டணிசிற் றிடையி லுறுநகையும்
பொட்டுத் திரளுட் பொதியு முயிர்

மேலும்

சிறப்பான படைப்பு.. சொல் நயம் பொருள் நயம் அழகு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Sep-2017 5:45 pm
விவேக்பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Sep-2017 7:54 pm

உன்புகழைப் பாடிவந்தோம் ஜெனக மாரி
உன்னதமாய்க் காக்கவேணும் கனக மாரி !
அன்றாடம் உனைத்துதிப்போம் ஜெனக மாரி
அன்புவிழிப் பார்வைகொடு கனக மாரி !
கொன்றாடும் தீயவினை வெந்து மாளக்
கொடுக்கவேணும் புயபலத்தை ஜெனக மாரி !
மன்றாடிப் பாடிவிட்டால் மகிழ்ந்து பார்க்கும்
மங்கலத்து ஜோதியடி கனக மாரி !

நீயருள்தல் திண்ணமெனச் சொல்லிச் சொல்லித்
நித்தமும்நாம் நல்லதொழில் செய்வோம் மாரி !
தாயருளைச் சத்தியமென் றோதி யோதித்
தானதர்மம் செய்வமம்மா ஜெனக மாரி !
போயுதிரும் சருகாக வீழ்ந்தி டாமல்
பொல்லார்க்குப் பொல்லாராய் சீறிக் காட்டி
வாயுதிர்க்கும் சொல்வழியில் வாழ்ந்தி ருப்போம் !
வாக்குரைத்தோம்

மேலும்

எண்ணமெனும் மார்கழியில் வண்ணமெனும் புதுமைகள் கிடைக்கிறது நண்பா! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Sep-2017 10:52 am
விவேக்பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Sep-2017 7:53 pm

வெள்ளமொன்று நமையிழுக்க வந்ததடா தம்பி !
வேகமாக அதில்குதிக்க வேண்டுமடா தம்பி !
கள்ளமற்ற கருணைவெள்ளம் வந்ததடா தம்பி !
காற்றிலேகி வானுலாவி நீகுதிப்பாய் எம்பி !
முள்ளுமாகி மலருமாகி வீற்றிருக்கும் தெய்வம்
மூளுகின்ற சுடருமாகிக் காத்திருக்கும் தெய்வம்
வெள்ளமென்று வந்ததிங்கு வெந்துயரைத் தீர்க்க
வேதனைவாழ் விட்டகற்றித் தன்கடலில் சேர்க்க !

ஆதிசக்தி யென்னும்வெள்ளம் ஆர்ப்பரித்துப் பாயும்
அனுபவத்தைக் கண்டவுள்ளம் அதில்மகிழ்ந்து சாயும் !
நீதிதன்னை நிலைநிறுத்த வந்ததிந்த வெள்ளம்
நீசர்தம்மை உள்விழுங்கி நிம்மதியைக் கொள்ளும் !
ஜோதியான சக்திவெள்ளம் தோன்றுமின்பம் மாயம்
சோதனைகள் தாங

மேலும்

அணை கடந்த வெள்ளத்தில் படகான மனிதத்தை செல்வமான வறுமை நிறைந்த காலத்தில் காண முடியாமல் தான் போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Sep-2017 10:50 am
விவேக்பாரதி - விவேக்பாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2017 8:47 pm

அந்திமகள் தந்தவொளி அற்புதமாய் வந்தவொளி
. அத்தனையும் முத்துவடம் கோக்குதே - என்
சிந்தனையில் சந்தவொலி சீவனுளே மந்திரமாய்ச்
. சித்திரமாய்த் தத்திவந்து பூக்குதே !

தென்னையிலும் மஞ்சளொளி திண்ணையிலும் வந்துநடம்
. தந்திடுஞ்ச லங்கையொலி கேட்குதே - அதன்
முன்னிலையில் பின்னெழிலில் சந்தமெழும் விந்தைதனில்
. முத்துக்கவி பொத்துவரப் பார்க்குதே !!

வெண்ணிலவோ வானமதில் வந்துவிளை யாடுவதில்
. வெந்தமனம் தண்ணொளியைக் காணுதே - இசைப்
பண்ணெனவே செந்திலவன் பாட்டினொலிக் கூட்டமுதம்
. பத்திரமாய் வந்துசெவி ஏறுதே !!

கம்பனவன் சிந்துகவி முந்தியென தண்மையிலே
. கந்துகமெ ரிந்துவிளை யாடுதே ! - அதில்
செம்புலமைப் பாட்டு

மேலும்

சபாஷ் ! உடனடிப் பின்னூட்டங்கள் ! அதே சந்தங்களில் ! பலே ! வாழ்க ! மிகக் நன்றி ஐயா !! 06-Sep-2017 10:39 pm
சந்தனமும் குங்குமமும் சொந்தமென கொண்டவளின் புன்னகையைப் போலகவி தாக்குதே ! அந்திமகள் சிந்துகிற அந்தவொளி தந்தகவி கண்டுமனம் சிந்தனையில் வேர்க்குதே ! 06-Sep-2017 10:33 pm
விவேக்பாரதி - விவேக்பாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2017 4:12 pm

அறுசீர் விருத்தங்கள்

அடர்ந்தொரு கான கத்தில்
. அகப்படும் நேரம், அச்சம்
பொடிந்திடக் காளி என்னும்
. பொலிவுடைக் கரங்கள் தூக்கி
வடிவுற அரசைத் தந்து
. வண்ணமின் நகருக் குள்ளே
குடிபுக வைத்தாள் அம்மா !
. குணவதி மறைந்தாள் அம்மா ! (1)

அம்மவோ அங்கே நானும்
. அமைவுற உன்றன் கீர்த்திச்
செம்மையை அன்றி வேறு
. சேர்க்கையைக் கருத்திற் கொள்ளேன் !
விம்மலும், துயரும், கோப
. வீச்சதும் ஏழைக் கன்றாம்!
தும்மலும் பெரிதாம், செல்வம்
. தோன்றிடப் பெற்றார்க் கங்கே ! (2)

கேண்மையும், அறிவும், ஞானக்
. கேள்வியும், சமவு ணர்வும்,
ஆண்மையும், தெய்வ பக்தி
. ஆழமும், இருந்த போதும்
ஊண்தரும் நின்றன் ஆற்றல்
. உட

மேலும்

நல்லது நல்லது நேரம் வரும்போது வெல்வோம் மரபில் விழைந்து ! 06-Sep-2017 9:27 pm
மரபினைப் பார்க்க மகிழ்வுடன் கேட்க மனங்களும் கோடி உண்டு ! வருமிடம் கண்டு மழைபொழி வுற்றால் வளங்களும் வாய்ப்ப துண்டு ! மரபிலும் பாக்கள் வனையுவீர் தோழ ! மாத்தமிழ் வாழ வேண்டும் ! தரமுடைப் பாக்கள் எளிமையும் வேண்டும் ! தருதல்நம் கடமை யன்றோ !! 06-Sep-2017 8:41 pm
மரபினை நேசிப்போர் மிகவும் குறைவு ! மரபை புரிந்து கொள்வோர் அரிது ! இலக்கணம் பார்த்து எழுதுவோர் எல்லாம் தலைக்கனம் பிடித்த முதியோர் என்று நினைப்பவர் இங்கே நிறைய என்பதால் புதுமையின் பக்கம் பார்வை செலுத்தினேன் இதுதான் காரணம் இனிய நண்பரே ! 06-Sep-2017 8:11 pm
அடடா! நெடுநாட்கள் கழித்து நானும் நெஞ்சினிக்கும் மரபுப் பாவில் படுவழகு வாழ்த்தாம் இந்தப் பாக்கண்டு சிலிர்த்து விட்டேன் ! உடனேதம் பக்கம் சென்றே உலவினேனங் கிருப்ப தெல்லாம் திடமான புதிதே யன்றி திறன்மரபும் இல்லை ஏனோ ? 06-Sep-2017 7:53 pm
விவேக்பாரதி - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Oct-2014 2:46 pm

பேசா திருப்பது ‘பேச்சுக்காய் ’ அல்ல சாக்லெட்டை
தாரா திருப்பது என்றறி.

மேலும்

கருத்துக்கு நன்றி நண்பரே. 02-Jul-2017 11:27 am
பேசா திருப்பதுபேச் சுக்கல்ல மிட்டாயைத் தாரா திருப்பதற்கென் றோர் ! பேசா(து) இருப்பதுபேச் சுக்(கு)அல்ல மிட்டாயைய் தாரா(து) இருப்பதற்(கு)என்(று) ஓர் ! இப்படி மாற்றினால் இலக்கணம் பிறழாத குறள் வெண்பா ஆகிவிடும் ! வாழ்த்துகள் ! 01-Jul-2017 1:38 pm
விவேக்பாரதி - Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jun-2017 4:04 pm

விண்ணி லுலவும் மேகங் கண்டு
வண்ணப் பாவால் வனைந்திட நினைத்துப்
பண்ணிய முயற்சியில் பலமுறை தோற்க
எண்ணம் பலித்திட இறைவனை இறைஞ்சித்
திண்ணிய நெஞ்சுடன் திரும்பவும் முயலப்
பெண்ணென் எழுத்தில் பிழைக ளகன்று
வெண்முகில் மனத்தில் விரியக்
கண்குளிர் காட்சியாய்க் கவிதை பிறந்ததே!

(நேரிசை ஆசிரியப்பா)

சியாமளா ராஜசேகர்

மேலும்

பிறந்த கவியைப் பிரியத் துடனே திறந்த எழுத்தில் திறமாய்ச் சுவைக்கச் சிறந்த கவிதைச் சிந்தலைக் கண்டு பறந்து நெஞ்சம் பரவசங் கொள்ள மறந்து போன வழக்க மெல்லாம் அறுந்து போன சொந்த மெல்லாம் திரும்ப வந்து சேர விரும்பும் நெஞ்சம் விசையுறப் பாடுமே ! 21-Jun-2017 12:03 am
agan அளித்த படைப்பை (public) உதயகுமார் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
17-Aug-2015 7:07 am

இது வரை பங்களிப்பு அளித்துள்ளோர்:
தோழர்கள்.
முரளி
ராஐன்
வேளாங்கண்ணி இரட்டையர்
உமை
சிவானந்தன்
பழனிகுமார்
சுந்தரேசன் புருசஷோத்தமன்
கருணாநிதி
சுசிந்தரன்
ஆதிநாடா
ஜின்னா
குமரேசன்
கிருபா கணேஷ்


அதிக தொகை அளிப்பதை தவிர்க்கவும்.

அக்டோபரில் சென்னையில் விழா நிகழும் சரியான நாள் இடம் விரைவில் அறிவிக்கப்படும்.

பலருக்கும் பகிரவும்.

மேலும்

கவித்தாசபாபதி அளித்த படைப்பை (public) குமரேசன் கிருஷ்ணன் மற்றும் 8 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
20-May-2015 7:44 pm

எந்நாளும் உன்பேர் சொன்னாலே போதும் என்வாழ்வு மிங்கே எழிலாகும்
---பொன்னாரம் பூண்ட மின்னாடும் மேனி என்வாழ்வைச் சேர்ந்த எழிலாகும்
செந்தாழம் பூவைக் கண்டாடும் கொங்கை கொண்டாளே தாயே உமையாளே
---உன்னாசி அன்றி வேறேது இங்கே என்பாவைக் காக்கும் ஒளியோசொல் !
சிந்தோடு சந்தம் வந்தாடும் வண்ணம் என்னோடு தாராய்த் தமிழாறை
---முன்னோர்கள் போற்ற முன்னேகி நானும் பொன்னான பாக்கள் பலபாடக்
கந்தோனின் கையில் அன்றோர்நாள் தாயே தந்தாயே வேலை அதுபோலே
---உன்சேயா மென்றன் கையோடு நீயும் தந்தாலே போதும் கவிவேலை !


எந்நாளும் செந்தாழம் சிந்தோடு கந்தோனின், பொன்னாரம் உன்னாசி முன்னோர்கள் உன்சேயா , எழிலாகும் எழிலாகும் உமை

மேலும்

மரபு கவி பாடும் நண்பர் விவேக் பாரதி வணக்கத்திற்கு உரியவர், அவரைப் பற்றிய இப்பதிவும் சாலச்சிறந்ததே வாழ்த்துக்கள் தோழர் கவித்தா சபாபதி . 13-Jun-2015 11:57 pm
மரபு மாறாமல் மற்றதை சேராமல் கூறி இருப்பது சிறப்பு... மரபு எப்போதும் மரபு மாறாமல் பேசப் படுவதுதான் சால சிறந்தது... அப்படி என்றால் இதுவும் அந்த வகையில் சேரும்... மிக சிறப்பு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-May-2015 12:44 am
நிச்சயம் செய்கிறேன் ...நேற்று ஏறக்குறைய 7 ,8 பதிவுகள் படித்தேன் ...அருமையாக இருந்தது ...நீங்கள் சொல்லித்தான் இப்படி ஒரு தொடர் இருப்பதே தெரிந்தது நன்றி..நன்றி 24-May-2015 8:55 am
மிக்க நன்றி என் பக்கம் 9 கட்டுரைகள் இருக்கும் yugangal இன் வானில். தோழமைகள் எழுதிய 23 படைப்புகள். நேரம் கிடைக்கும்போது பார்த்து மனதில் படுவதை உரைத்தால் தொடரை செப்பனிட உதவும். 23-May-2015 5:17 pm
பொள்ளாச்சி அபி அளித்த எண்ணத்தை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
30-Apr-2015 3:22 pm

பொள்ளாச்சி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்,கலைஞர்கள் சங்கம் -மாதாந்திர இலக்கிய சந்திப்பு. வாய்ப்பு உள்ளவர்கள் வருக..!

மேலும்

"பொள்ளாச்சி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்,கலைஞர்கள் சங்கம் என்ற எண்ணத்தை manimegalaimani, vivekbharathi, சர்நா, இராஜ்குமார் Ycantu, thaagu, sarabass, Punitha Velanganni ஆகிய 7 உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்டதற்கு எனது நன்றிகள்.! 02-May-2015 1:10 pm
Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) ராம் மூர்த்தி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
13-Apr-2015 5:22 pm

அங்கக் குறைபாடால் அல்லலுற வேண்டாமே
தங்கமகன் காத்திடுவான் தாயுனை - மங்கையே!
பாலகனின் பாசமும் பக்கத் துணையிருக்க
சீலமாய் வாழ்வாய் சிறந்து .

மேலும்

மிக்க நன்றி ! 18-Apr-2015 3:11 pm
மிக்க நன்றி சாந்தி ! 18-Apr-2015 3:10 pm
மிக்க நன்றிம்மா ! 18-Apr-2015 3:09 pm
மிக்க நன்றி ! 18-Apr-2015 3:09 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (135)

இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
தௌபீஃக் ரஹ்மான்

தௌபீஃக் ரஹ்மான்

பொள்ளாச்சி
பாலா

பாலா

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (136)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
எழுத்து

எழுத்து

கோயம்புத்தூர்

இவரை பின்தொடர்பவர்கள் (136)

ஆவாரம் பூ

ஆவாரம் பூ

தமிழ்நாடு
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே