சிரித்திருந்த தவம்

சிரித்திருந்த தவம்
---------------------------------
இருக்கின்ற இடந்தனிலே பசுமை கொண்டாய்
== இளஞ்சிவப்பில் வான்நோக்கும் வதனம் பூண்டாய்
இதழோடு இதழ்சேர்த்துப் பூவாய் ஆனாய்
== இளமிருட்டில் நீநடிக்கும் பாவை ஆனாய்
இறுமாந்த புன்னகையால் அழகி யானாய்
== இடந்தந்து வண்டிற்கும் தாயாய் ஆனாய்
இருந்திருந்தும் ஒற்றைக்கால் தவத்தில் நீயும்
== இளைத்தாலும் ஒருநாள்தான் ஆயுள் கண்டாய் !

...மீ.மணிகண்டன்
#மணிமீ
09/27/2017

எழுதியவர் : மீ.மணிகண்டன் (29-Sep-17, 11:37 am)
பார்வை : 1791

மேலே