மீ மணிகண்டன் - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : மீ மணிகண்டன் |
இடம் | : தமிழ்நாடு, இந்தியா |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 3801 |
புள்ளி | : 1036 |
எனது கற்பனையில் உதித்த கவிதைகளும் கதைகளும் இங்கே நிறைய. எண்ணங்களில் எமது ஒளிப் படப் பதிவுகள் நிறைய. நலமே விளைக நன்றே வாழ்க! ...மீ.மணிகண்டன்
புனைப்பெயர்: மணிமீ
~அறிந்தும் அறியாமல் ~
நதியாய் நடந்தாய் நளினம் என்றேன்
நடையில் என்ன இருக்கிற தென்றாய்
உதிக்கும் கதிர்போல் உன்விழி என்றேன்
உணரா ததுபோல் ஒதுங்கிக் கொண்டாய்
புதிதாய் எத்தனை கவிதைகள் சொன்னேன்
புரியா மல்நீ புருவம் நெளித்தாய்
அதிசயம் என்று அதையும் சொன்னேன்
அதற்கும் பதிலாய் அதயே செய்தாய்
மதியில் எழுதி வரிகளில் வடித்தேன்
மனதைச் சொல்லி விடுவேன் என்று
ரதியே இன்னும் எத்தனை நாள்தான்
ரகசிய நாடகம் நீயும் செய்வாய்?
#மணிமீ
Jul/25/2024
வீசும் பனிக்காற்றில்
வீணை நாதம் நீ
பேசும் நதியலையில்
பிறந்துவரும் புது ஒலி நீ
ஓசை எழுப்புகின்றாய்
உன்னைத் தேடுகின்றேன்
ஒருமுறை காட்சிகொடு
உயர்பிறவி நானாவேன்!
#மணிமீ
16-7-2024
கதையின் தலைப்பு: அந்த மூன்றாவது பயணி...
எழுதியவர்: மீ.மணிகண்டன்
நாள்: 24-Aug-2021
அந்த மூன்றாவது பயணி...
இரவுநேரப் பயணம் என்பதால் அந்தப் பேருந்தில் நவீன் மற்றும் இரண்டு நபர்கள் தவிர வேறு பயணிகள் இல்லை. நவீன் சன்னல் ஓரமாக அமர்ந்து குளுகுளு காற்றை சுகித்தவாறே இருட்டில் வேடிக்கை பார்க்க முடியாவிட்டாலும் இருட்டையே பார்த்துக்கொண்டு பழைய படப் பாடல்களை தனக்குமட்டுமே கேட்கும் வகையில் பாடிக்கொண்டிருந்தான். மற்ற இரு பயணிகளும் நல்ல உறக்கத்தில். மணியுர் பேருந்து நிலையம் சென்றடைய இன்னும் மூன்று மணிநேரம் ஆகும் இப்போது மணி இரவு 11:35. கண்டக்டர், தனியே ஒரு இருக்கையில் அமர்ந்து பயணசீட்டு வரவுக் கணக்கை
என் தேவதையே
எந்தன் மனசிறையில் நீ
இருந்தாலும் ....!!
என் உள்ளத்தில் நீ
சுதந்திரமாக ...
சுற்றி வருவதற்கு
எந்த கட்டுப்பாடுமில்லை ..!!
இந்த கவிதையை
படிப்பவர்களின் மனதில்
ஒரே குழப்பம் ...!!
இருப்பது சிறையில் ..
சுதந்திரம் எப்படி ,,??
இந்த ரகசியம் யாருக்கும்
தெரிய வேண்டாம் ..!!
புரியாத புதிராகவே
இருக்கட்டும் ..!!
--கோவை சுபா
குறை ஏதும் இல்லை தங்கத்தில்
தங்கத்தை உருக்க உருக்க தூய
தங்கமே கிடைக்கும் அது போல
தாயின் மனம் இறங்க அன்புதான்
தூய அன்பு மட்டுமே கிட்டும்
சிரிப்புத்தான் எத்தனை வகை
சிதறி தெறிக்கிறது
இளங்குமரியின் சிரிப்பு
அருகில் எங்கோ
அவளுக்கு பிடித்த
ஆண் மகன்
இருக்கவேண்டும்
பொக்கை வாயால்
பொங்கிய சிரிப்பு
ஓய்வு ஊதியம் அதிகம்
அதிகமாய் வருமென
செய்தி வந்துள்ளது
கெக்கலிட்டு அழைத்த
சிரிப்பு அம்மாவை
ஏமாற்றிய குழந்தை
எதிரே வந்தவன்
தடுக்கி விழ
தடுக்க முடியாத
தவித்திட்ட சிரிப்பு
அதிரவைத்த அதிரடி
சிரிப்பு எதிரே
திரையில் யாரோ
நகைச்சுவையாய் நடிக்கிறார்
அடுக்கடுக்கான சிரிப்பு
ஆனந்த சிரிப்பு
கண்களில் வழியும்
கண்ணீர் சிரிப்பு
சிரிப்பு மட்டும்
நம் வாழ்க்கையையும்
பிறர் மனதையும்
மாற்றும் மருந்து
தமிழர் நாம் !
~~~~~~~~~~~~~~
அன்னம் விளைக்க ஏருழுவோம்
=== அனைவர் புசிக்கப் பயிரிடுவோம்
ஒன்றே குலமாய் யாமிருப்போம்
=== ஒற்றை வீட்டில் குடிவாழ்வோம்
மண்ணைத் தேடி வருவோரை
=== மனதைத் தொடவே அன்பேந்தி
திண்ணை நின்று வரவேற்போம்
=== திகட்டா தறுசுவை விருந்தளிப்போம்
புன்னை நிழலில் விளையாடி
=== புத்தகக் கதைகள் கலந்தாடி
சென்னல வாழ்வை தினம்வாழும்
=== சித்தர் வழிநாம் தமிழரென்போம் !
... மீ.மணிகண்டன்
#மணிமீ
10-Jan-2018
இயலிசை யோடு நாடக மென்ற
***இன்றமிழ் மூன்றினைப் போலே
மயக்கிடும் வேறு மொழியெது முண்டோ
***மதித்திடு தாய்மொழித் தமிழை !
சுயத்துடன் விளங்கும் செம்மொழி தன்னைச்
***சுத்தமாய்க் கலப்பட மின்றி
வியத்தகு வண்ணம் தனித்தமிழ் பேசி
***விளங்கிடச் செய்திடல் நன்றே !
வானம் நடத்தும் வாண வேடிக்கை
புதுமழை விழாவின் பூமத் தாப்பு
முத்துநூல் உதறல் ; முகில்துகில் கிழிசல்
கார்அ ரக்கனின் கோணற் சிரிப்பு
நீலச் சகதியில் நெளியும் வெண்புழு
மேகச் சாம்பலில் மின்னும் வெண்தணல்
உரைகலில் மின்னும் வெள்ளி இரேகை
வினாடியில் வற்றும் வெளிச்ச ஆறு
விண்தோட் டத்தின் வெள்ளிக் கொடிகள்
மழைச்செய்தி கூறும் செய்கை விளக்கு
கருமுகில் இமைகளின் கண்சி மிட்டல்
நீரில் பிறக்கும் நெருப்பு ; நம் இயற்கை
கிறுக்கு கின்ற சுருக்கெழுத் திதுவே
-அப்துல் ரகுமான்
ஆடித் திங்கள் பதினெட்டு,
ஆடி யிங்கு கரைதொட்டு,
கூடி நின்ற சனந்தொட்டு,
பாடு தம்மா நதிமெட்டு !
ஊருந் தாண்டி உறவுகள்,
பேருந் தேறி வருவார்கள்,
யாரும் இங்கே இணைவார்கள்,
தேரைக் காண நிறைவார்கள் !
ஆடி நீந்திக் களிப்போடு,
சூட மேந்தி மலரோடு,
பாட நன்றிப் பரிவோடு,
நாடி வாரார் மனதோடு !
அத்தை அம்மான் விருந்தோம்பல்,
பூத்த பெண்மான் உடனாவாள்,
பார்த்து வார்த்தைப் பரிமாறல்,
வேர்த்து நாணும் விடலைகள் !
கம்பு சுற்றும் குதிரைக்கும்,
செம்புக் கம்பி வளவிக்கும்,
நோன்பி ருக்கும் சிறுவர்க்கும்,
தெம்பு சேர்க்கும் கடைக்கூட்டம் !
பச்சை நீலம் பவழத்தில்,
இச்சை கூட்டும் நகைப