காலச்சுவடுகள் 5 அப்துல் ரகுமான்

வானம் நடத்தும் வாண வேடிக்கை
புதுமழை விழாவின் பூமத் தாப்பு
முத்துநூல் உதறல் ; முகில்துகில் கிழிசல்
கார்அ ரக்கனின் கோணற் சிரிப்பு
நீலச் சகதியில் நெளியும் வெண்புழு
மேகச் சாம்பலில் மின்னும் வெண்தணல்
உரைகலில் மின்னும் வெள்ளி இரேகை
வினாடியில் வற்றும் வெளிச்ச ஆறு
விண்தோட் டத்தின் வெள்ளிக் கொடிகள்
மழைச்செய்தி கூறும் செய்கை விளக்கு
கருமுகில் இமைகளின் கண்சி மிட்டல்
நீரில் பிறக்கும் நெருப்பு ; நம் இயற்கை
கிறுக்கு கின்ற சுருக்கெழுத் திதுவே
-அப்துல் ரகுமான்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
