சுவடுகள்

ஞானியின் சுவடுகள்
மோன வெளியினில்
பயணிகள் சுவடுகள்
பாலை மணலில்
போரின் சுவடுகள்
வரலாற்றுப் பக்கங்களில்
காலச் சுவடுகள்
வாழ்வின் மணல் விரிவினில்
நிலவின் சுவடுகள்
காதலில்
காதலின் சுவடுகள்
நெஞ்சினில்
நெஞ்சின் சுவடுகள்
கவிதையில்
கவிதையின் சுவடுகள்
உன்னிலும் என்னிலும் ..

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Mar-16, 10:31 pm)
Tanglish : suvadukal
பார்வை : 93

மேலே