மதித்திடு தாய்மொழித் தமிழை

இயலிசை யோடு நாடக மென்ற
***இன்றமிழ் மூன்றினைப் போலே
மயக்கிடும் வேறு மொழியெது முண்டோ
***மதித்திடு தாய்மொழித் தமிழை !
சுயத்துடன் விளங்கும் செம்மொழி தன்னைச்
***சுத்தமாய்க் கலப்பட மின்றி
வியத்தகு வண்ணம் தனித்தமிழ் பேசி
***விளங்கிடச் செய்திடல் நன்றே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (2-Dec-16, 8:37 pm)
பார்வை : 155

மேலே