புன்னகை செய்
அற்புதமாக இருந்தால் சிரி
ஆனந்தமாக இருந்தால் சிரி
இன்பமாக இருந்தால் சிரி
ஈர இதழ்கள் வளைந்திட சிரி
உன் மனம் மகிழ்ந்திட சிரி
ஊமையானாலும் பேசாமல் சிரி
எந்த சூழ்நிலையிலும் கொஞ்சம் சிரி
ஏற்பட்ட நன்மைக்காக சிரி
ஐயத்தை போக்கிட சிரி
ஒரு முறை எனக்காக சிரி
ஓசை இல்லாமல் ஒருமுறை சிரி
இதை படித்த பிறகாவது சிரித்தால் சரி
கவலை வேண்டாம்
சிரிப்புக்கு இல்லை வரி