AchuthanDevadoss - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  AchuthanDevadoss
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  28-Nov-2016
பார்த்தவர்கள்:  104
புள்ளி:  7

என் படைப்புகள்
AchuthanDevadoss செய்திகள்
AchuthanDevadoss - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2016 6:30 pm

முண்டாசு கட்டிய தலையும்று
முறுக்கிய மீசை முகமும்
தோற்றத்திலே வெளிப்படுத்தினார் அச்சமில்லை என்று
காதலை கவிபாடினார் கண்ணம்மாவின் மீது அன்று
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே
பாப்பா பாட்டு படிக்கையிலே - பாரதி முகம்வந்து தோன்றுது கண்களிலே
ஆடுவோமே - பள்ளுப் பாடு வோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று
பாடுவோமே - கவிதைகள் ஏற்றுவோமே
முண்டாசுக்கவி எங்கள் அன்னை தமிழ்நா டென்று
நல்லதோர் வீணைசெய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?"
நல்லதொர் கவிதை ஏற்றி - அதில் உன் புகழ் கூறாதுவிடுவது நன்றோ
"காண்பெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?"
நீ மறைந்த

மேலும்

AchuthanDevadoss - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Nov-2016 7:09 pm

உன் வாழ்க்கை புத்தகத்தில்
நான் நடுவே வரும் ஒரு அத்தியாயம் அல்ல
இறுதிவரை வரும் பக்க எண்
நீ படிக்கும் அனைத்து பக்கங்களிலும் இருப்பேன்

மேலும்

AchuthanDevadoss - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Nov-2016 12:36 pm

அற்புதமாக இருந்தால் சிரி
ஆனந்தமாக இருந்தால் சிரி
இன்பமாக இருந்தால் சிரி
ஈர இதழ்கள் வளைந்திட சிரி
உன் மனம் மகிழ்ந்திட சிரி
ஊமையானாலும் பேசாமல் சிரி
எந்த சூழ்நிலையிலும் கொஞ்சம் சிரி
ஏற்பட்ட நன்மைக்காக சிரி
ஐயத்தை போக்கிட சிரி
ஒரு முறை எனக்காக சிரி
ஓசை இல்லாமல் ஒருமுறை சிரி
இதை படித்த பிறகாவது சிரித்தால் சரி
கவலை வேண்டாம்
சிரிப்புக்கு இல்லை வரி

மேலும்

AchuthanDevadoss - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2016 10:43 pm

உயிர் பிரிந்தால் மனிதன் மண்ணாகிறான்
உயிர் விதைத்தால் மண் மரமாகிறது
மனிதன் வாழ மரம் தன் அனைத்தும் அளித்தது
மனிதனோ தான் வாழ மரம் அனைத்தையும் அழிக்கிறான்
மண்ணுக்கும் விண்ணுக்கும் இருக்கும் காதல் தூது மரம்
மண் காய்ந்தால் விண்ணில் இருந்து மாரி பெறும்
பஞ்ச பூதங்களையும் ஒன்றாகும் உயிரினம்
பஞ்சம் வந்தால் உயிர் காக்கும் மரமாகும்
கூடு கூடாக வீடு கட்டி பறவைகள் வசிக்கும்
கூட்டம் கூட்டமாக ஆடு மாடுகள் இலைகளை புசிக்கும்
மூச்சுக்காற்று தரும் மரத்திற்கு
நச்சுகாற்று தருகிறோம் நாம் அதற்கு
தத்து எடுத்து ஒரு குழந்தைக்கு வாழ்வளிக்கும் மனிதர்கள்
விதை விதைத்து ஒரு கூட்டத்தை வாழவைக்க சிந்திப்போம்!

மேலும்

AchuthanDevadoss - AchuthanDevadoss அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Nov-2016 1:49 pm

கருவில் சுமக்கும் அம்மா மூன்றெழுத்து
காலமெல்லாம் சுமக்கும் அப்பா மூன்றெழுத்து
உடன்பிறப்புகளின் உறவு மூன்றெழுத்து
உடன்பிறவா உறவாக நட்பு மூன்றெழுத்து
பள்ளியில் பயிலும் கல்வி மூன்றெழுத்து
கல்வியில் சிறக்க தேர்வு மூன்றெழுத்து
அதன் மூலம் கிடைக்கும் அறிவு மூன்றெழுத்து
அறிவை கொண்டிருக்கும் மனம் மூன்றெழுத்து
மனதில் இருக்கும் சக்தி மூன்றெழுத்து
பருவத்தில் மலரும் காதல் மூன்றெழுத்து
காதலின் முதிர்ச்சி காமம் மூன்றெழுத்து
அதன் வரமாக மழலை மூன்றெழுத்து
மழலையின் முதல் ஒலி அழுகை மூன்றெழுத்து
அதிலும் இருக்கும் அழகு மூன்றெழுத்து
அழகில் சிறந்த தமிழ் மூன்றெழுத்து
தமிழில் எழுதப்பட்ட கவிதை மூன்றெழுத்த

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே