மரம்

உயிர் பிரிந்தால் மனிதன் மண்ணாகிறான்
உயிர் விதைத்தால் மண் மரமாகிறது
மனிதன் வாழ மரம் தன் அனைத்தும் அளித்தது
மனிதனோ தான் வாழ மரம் அனைத்தையும் அழிக்கிறான்
மண்ணுக்கும் விண்ணுக்கும் இருக்கும் காதல் தூது மரம்
மண் காய்ந்தால் விண்ணில் இருந்து மாரி பெறும்
பஞ்ச பூதங்களையும் ஒன்றாகும் உயிரினம்
பஞ்சம் வந்தால் உயிர் காக்கும் மரமாகும்
கூடு கூடாக வீடு கட்டி பறவைகள் வசிக்கும்
கூட்டம் கூட்டமாக ஆடு மாடுகள் இலைகளை புசிக்கும்
மூச்சுக்காற்று தரும் மரத்திற்கு
நச்சுகாற்று தருகிறோம் நாம் அதற்கு
தத்து எடுத்து ஒரு குழந்தைக்கு வாழ்வளிக்கும் மனிதர்கள்
விதை விதைத்து ஒரு கூட்டத்தை வாழவைக்க சிந்திப்போம்!

எழுதியவர் : அச்சுதன் தி தே (28-Nov-16, 10:43 pm)
சேர்த்தது : AchuthanDevadoss
Tanglish : maram
பார்வை : 252

மேலே