அழகு
புள்ளின் நுனியில்
மெல்லிய பனித்துளி
கடலின் அலையில்
கரையும் கரைகள்
பூவை வட்டமிடும் வண்ணத்து பூச்சி
பூமியை வட்டமிடும் நிலவின் காட்சி
காற்றில் கலந்து வரும் மல்லிப்பூ வாசம்
சேற்றில் கால் பதிக்கும்
உழவரின் நேசம்
நாற்றங்கால் நடுகையில் தெம்மாங்கு பாட்டும்
உறக்கம் இல்லா இரவுகளில் தாலாட்டு பாடும்
ஆசையாக வளர்த்த மலர் சோலையும்
அற்புதமாக நெய்த கலர் சேலையும்
வற்றாத தமிழும்
வாடாத தமிழனும்
அன்றும் இன்றும் என்றும் அழகு
அழகாக இருந்திட புன்னகை பழகு
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
