T. Joseph Julius - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  T. Joseph Julius
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Nov-2012
பார்த்தவர்கள்:  2857
புள்ளி:  2559

என்னைப் பற்றி...

தமிழனாய் பிறந்து, தமிழ் வழி பயின்று, பொருளாதாரம் மற்றும் கிறிஸ்துவ இறையியலில் முதுகலை பட்டங்கள் பெற்றவன். தணிக்க்கைத் துறை அலுவலராக பணி ஆற்றி ஓய்வு பெறாமல் மீளவும் அரசு சார் நிறுவனத்தில் கணக்கு அலுவலராக பணி ஆற்றி வருகிறேன். மனைவியும் ஒரு எழுத்தாளர். மேரி ஜெசிந்தா என்பது அவரது பெயர். ஒரு மகள், ஒரு மகன். மூன்று பேத்திகள். வயதிலும் பணியிலும் மூத்தவன்.பாட்டுதொகை எனும் கவிதை தொகுப்பு, திருமந்திரமும் திருவிவிலியமும் மற்றும் பதினெண் கீழ்க் கணக்கும் திருவிவிலியமும் போன்ற ஒப்பு நோக்கி ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளேன். இன்று வீசிய தென்றல் எனும் கவிதை கொத்து வெளியிடப்படாத நிலையில் அவற்றை இங்கு சமர்ப்பித்துள்ளேன்.எனது ஆங்கில கவிதைகளுக்கு எனது முகனூலைப் பாருங்கள். ஜுலியஸ்’ஸ் ஸ்க்ரிப்ளிங்ஸ்’ என்ற தலைப்பின் கீழ்.

என் படைப்புகள்
T. Joseph Julius செய்திகள்
T. Joseph Julius - T. Joseph Julius அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jul-2024 3:53 pm

பொன்னார் மேனியனே

“பொன்னார் மேனியனே…புலித்தோலை அரைக்கசைத்து….
மின்னார் செஞ்சடைமேல்…மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே…மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால்…இனியாரை நினைக்கேனே”
சுந்தரர் பாடிய பாடலை தானும் மெய் மறந்து பாடிக் கொண்டு அமர்ந்து இருந்தார் அந்த சிவனடியார். கொன்ன மரச் சாமியார் என அந்த வட்டாரத்தில் அழைக்கப்படும் அவரது தலைக்கு மேலிருந்த கொன்றை மரம், பொற்சங்கிலி, பொன் மாரி எனப்படும் மலர்களை பொற்துகள்களாக அவர் மீது தூவி அவருக்கு அபிஷேகம் செய்து கொண்டு இருந்தது.
அவருக்கு எதிரே வந்து, நெடுஞ்சான்கிடையாக மண்டியிட்டு வீழ்ந்து, வணங்கி எழுந்து சிறிது நேரம் நின்று இருந்த செம்புலி,

மேலும்

T. Joseph Julius - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jul-2024 3:53 pm

பொன்னார் மேனியனே

“பொன்னார் மேனியனே…புலித்தோலை அரைக்கசைத்து….
மின்னார் செஞ்சடைமேல்…மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே…மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால்…இனியாரை நினைக்கேனே”
சுந்தரர் பாடிய பாடலை தானும் மெய் மறந்து பாடிக் கொண்டு அமர்ந்து இருந்தார் அந்த சிவனடியார். கொன்ன மரச் சாமியார் என அந்த வட்டாரத்தில் அழைக்கப்படும் அவரது தலைக்கு மேலிருந்த கொன்றை மரம், பொற்சங்கிலி, பொன் மாரி எனப்படும் மலர்களை பொற்துகள்களாக அவர் மீது தூவி அவருக்கு அபிஷேகம் செய்து கொண்டு இருந்தது.
அவருக்கு எதிரே வந்து, நெடுஞ்சான்கிடையாக மண்டியிட்டு வீழ்ந்து, வணங்கி எழுந்து சிறிது நேரம் நின்று இருந்த செம்புலி,

மேலும்

T. Joseph Julius - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jul-2024 3:42 pm

உதிர்ந்த பூங்கனவுகளை உடலில் தாங்கி நிற்கும் பூமி
அதிர்ந்து குலுங்குவதால் அன்றாடம் அய்யய்யோ அச்சம்;
முடிந்து விட்ட மரணங்களால் முடிவுறாத கவிதைகளால்
விடிந்து விடுமோ இன்றாவது எனும் கேள்வியே மிச்சம்.

தாய் எனத் தெரிந்தும் பாய்க்கு வாவென்றழைத்து
வாய்ப்பு வரும்போதெலாம் வண்புணர்வு செய்யும்
நாய்க்குணம் மாறாமல் நன்னிலத்தின் கற்பதனை
காய்த்துப் போகவே கொள்ளைக் களவாடினோம்

வடவாறு வெட்டாறு வெண்ணாறு குடமுருட்டிக் காவேரியென
நடமாடிய நதிகளெல்லாம் உடை மாற்றிக் கொண்டனவே
படம் வரைந்து காட்டும் பரிதாப நிலையடைந்தோம்
இடம் பெயர்ந்து போகும் இன்னலுக்கு ஆளானோம்

நிலம் கொத்திப் பறவை என்றதும் நம் நினைவில்
நி

மேலும்

T. Joseph Julius - T. Joseph Julius அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jun-2024 2:36 pm

வண்ணங்களால் இழைக்கப்பட்ட
எண்ணக் கோலங்களை
சின்னச் சின்னக் கண்ணிகளில்
பின்னிப் பின்னிக்
கூறலாம் என்ற
சிந்தனை எழுந்தது

பிள்ளைப் பிராயத்தின்
நினைவுகளை நாம்
வெள்ளைப் புத்தககம்
எனக் கொள்வோமாயின்
நீலக் கோடுகளை
நான்கு ஓரங்களிலும்
எல்லைகளாக வரைந்து
இடையினில் இருக்கும்
வெள்ளை வெளேரெனும்
திரையினில் தோன்றி
கள்ளமின்றி சிரிப்பது
கருவண்டு போன்ற
கண்கள் மட்டுமே.

அந்தக் கண்கள்
அந்தரத்தில் சுழன்று
மந்தகாச வெயிலின்
மஞ்சள் நிறத்தில்
பச்சை சுவர்களுக்குப்
பின்னால் பெய்யும்
முத்து மழையினை
பவளம் கோத்த
பாடல்களால் பாட
ஊதா நிறத்து
சங்கு புஷ்பங்கள்
தோதாய் நின்று
தூது சொல்லின

சிவ

மேலும்

T. Joseph Julius - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jun-2024 2:36 pm

வண்ணங்களால் இழைக்கப்பட்ட
எண்ணக் கோலங்களை
சின்னச் சின்னக் கண்ணிகளில்
பின்னிப் பின்னிக்
கூறலாம் என்ற
சிந்தனை எழுந்தது

பிள்ளைப் பிராயத்தின்
நினைவுகளை நாம்
வெள்ளைப் புத்தககம்
எனக் கொள்வோமாயின்
நீலக் கோடுகளை
நான்கு ஓரங்களிலும்
எல்லைகளாக வரைந்து
இடையினில் இருக்கும்
வெள்ளை வெளேரெனும்
திரையினில் தோன்றி
கள்ளமின்றி சிரிப்பது
கருவண்டு போன்ற
கண்கள் மட்டுமே.

அந்தக் கண்கள்
அந்தரத்தில் சுழன்று
மந்தகாச வெயிலின்
மஞ்சள் நிறத்தில்
பச்சை சுவர்களுக்குப்
பின்னால் பெய்யும்
முத்து மழையினை
பவளம் கோத்த
பாடல்களால் பாட
ஊதா நிறத்து
சங்கு புஷ்பங்கள்
தோதாய் நின்று
தூது சொல்லின

சிவ

மேலும்

T. Joseph Julius - T. Joseph Julius அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jun-2024 4:07 pm

”என்னுடைய 20 வருட வழக்கறிஞர் பணியில் பெருமளவு நேரத்தை நூற்றுக் கணக்கான வழக்குகளில் தனிப்பட்ட சமரசம் செய்து வைப்பதில்தான் கழித்தேன்! இதனால் நான் எதையும் இழக்கவில்லை; பணத்தைக் கூட இழக்கவில்லை; நிச்சயமாக ஆன்மாவை இழந்து விடவில்லை”
மகாத்மா காந்தியின் படம் போட்டு மேற்கண்டவாறுஅவரே சொல்வதாக எழுதி இருந்த ’சமரச மையம்’ என்ற பலகையினை அதன் கீழ் நின்றிருந்த அவன் படித்துப் பார்த்தான்.
கோவையில், கோபாலபுரத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதி மன்றங்களின் வளாகத்தில் அவன் நின்றிருந்தான். அவனுக்கு, அங்கு அதில் எழுதி வைக்கப்பட்டு இருந்த ‘’ இரு தரப்பினருக்கும் வெற்றி என்ற நிலை உருவாகும்’’ என்பது மிகவும் பிடித்த

மேலும்

T. Joseph Julius - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jun-2024 4:07 pm

”என்னுடைய 20 வருட வழக்கறிஞர் பணியில் பெருமளவு நேரத்தை நூற்றுக் கணக்கான வழக்குகளில் தனிப்பட்ட சமரசம் செய்து வைப்பதில்தான் கழித்தேன்! இதனால் நான் எதையும் இழக்கவில்லை; பணத்தைக் கூட இழக்கவில்லை; நிச்சயமாக ஆன்மாவை இழந்து விடவில்லை”
மகாத்மா காந்தியின் படம் போட்டு மேற்கண்டவாறுஅவரே சொல்வதாக எழுதி இருந்த ’சமரச மையம்’ என்ற பலகையினை அதன் கீழ் நின்றிருந்த அவன் படித்துப் பார்த்தான்.
கோவையில், கோபாலபுரத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதி மன்றங்களின் வளாகத்தில் அவன் நின்றிருந்தான். அவனுக்கு, அங்கு அதில் எழுதி வைக்கப்பட்டு இருந்த ‘’ இரு தரப்பினருக்கும் வெற்றி என்ற நிலை உருவாகும்’’ என்பது மிகவும் பிடித்த

மேலும்

T. Joseph Julius - T. Joseph Julius அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jan-2023 6:47 pm

கண்ணீர் சொல்லாத காதலை
கண்கள் சொல்லி விடும்.

”ஒலகம் ரொம்ப கெட்டுக் கெடக்கு, பாத்துப் போ மக்கா”
என்ற சியாமளாவின் சங்கீதக் குரலுக்கு,
”சரிம்மா” என பதில் அளித்த நீலாம்பரி, உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டு தலையில் அடித்துக் கொண்டாள்.
“ நீ நிக்கிற நிலையும் நெல்லு விக்கிற வெலையும், எதுவுமே சரியில்லே. நானும் உன் அக்காமார் ரெண்டு பேரையும் வளர்த்துட்டுதான் இருக்கேன். ஆனால் ஒன்ன மாதிரி எனக்கு யாரும் கவலை கொடுக்கல்ல” என்றாள் சியாமளா. அவள் அப்படி சலித்துக் கொள்ளக் காரணம், நீலா போட்டிருந்த உடைதான்.
வாசலில் கிடந்த ‘ப்ளாட்ஃபார்ம்” எனப்படும் மூன்று அங்குல குதிக்கால் கொண்ட செருப்பினைக் குனிந்து வார்

மேலும்

T. Joseph Julius - T. Joseph Julius அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jul-2020 5:07 pm

மழை வந்தால்
தவளைக்குத்தான்
கொண்டாட்டம்
என்பதில்லை.
மழையில் நனைந்த
செடி கொடிகளில்
பச்சயம் பூத்திருப்பது போல
எனது முகத்திலும்
பூத்திருக்கிறது மகிழ்ச்சி.

இரவின் அடர் இருட்டினில்
மழைத் தூறல் கிளப்பிடும்
மண் வாசனையை
ஆழமாய் முகர்கிறேன்.
குரல் எனது சன்னமாய்
இதுவரை எவருமே
கேளாத பாடலைப்
பாடிக் கொண்டிருக்கிறது

மழை மேகம் குழைந்து வந்து
தெரு விளக்கு வெளிச்சத்தில்
குழுமி நிற்கிறது பனி மூட்டமாய்
என் வீட்டுக் கூரையினப்
பட்டும் படாமல்
தழுவிக் கிடக்கிறது.

கார் மேக வண்ணங் கொண்ட
கண்ணனின் கைச் சரக்கான
பேர் தெரியாத அந்த நீளக்
குழல் வழியே
நித்தமும் நடனமிடும்
மந்திர இசையினில்

மேலும்

வெகு நாள் கழித்து வந்த எனக்கு தங்களது பாராட்டு மிக்க ஊக்கமளித்தது. மிக்க நன்றி ஐயா 11-Jul-2020 3:31 pm
அருமை அருமை கார் மேக வண்ணங் கொண்ட கண்ணனின் கைச் சரக்கான பேர் தெரியாத அந்த நீளக் குழல் வழியே நித்தமும் நடனமிடும் மந்திர இசையினில் எந்திரப் பெண் போல எழுந்து நடந்திடும் கோபியரைப் போலே என்னைச் சுற்றிலும் கன்னியர் கூட்டம். மந்திர இசையினில் எந்திரப் பெண் போல ------நவீன உவமை இனிமை சிறந்த கற்பனைக் கவித்துவம் பாராட்டுக்கள் 11-Jul-2020 11:22 am
T. Joseph Julius - கவிதாயினி அமுதா பொற்கொடி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jul-2020 9:39 am

வேடிக்கை மனிதர்கள் ....

அன்று பள்ளி அலுவல் அறையில் ஒரு முக்கியமான ஃபைலை , பத்திரமாக வைக்கவேண்டும் என்று எங்கோ வைத்துவிட்டு... வைத்த இடத்தை மறந்து தேடிக் கொண்டிருந்தேன்.... அலுவலறை கதவில் உள்ள கண்ணாடி வழியே ...வெளியே ஒருவர் என்னை சந்திக்க காத்திருக்கிறார் என்பது நன்றாகவே தெரிந்தது... உருவத்தைப் பார்த்ததும் வந்தவர் யார் என்று யூகித்துக் கொண்டதால், வேண்டுமென்றே குனிந்தத்தலையை நிமிர்த்தாமல் என் தேடுதலை தொடர்ந்தேன்.... காத்திருப்பவர் சற்று நிதானம் இழந்து நான் தலையை நிமிர்த்தி பார்க்கின்றேனா என்று கண்ணாடிவழியே உற்று உற்று பார்த்துக்கொண்டேயிருந்தார்....

யாரையும் வேண்டுமென்றே காத்திருக்க வைத

மேலும்

ஆஹா, அருமை 08-Jul-2020 3:26 pm
T. Joseph Julius - பாலமுருகன் கணபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2018 1:42 pm

வெள்ளைக்கார கூட்டமொன்றை
வேர்பிடுங்க வந்தது
வெல்லுகின்ற வழியை நமக்கு
சொல்லி அன்பை தந்தது
வில்லும் அம்பும் இன்றியிங்கு
வீறு கொண்டு நின்றது
வீழ்ச்சி யின்றி சூழ்ச்சியின்றி
வெற்றி பல கண்டது
கத்தி யின்றி விடுதலையை
பெற்ற வொன்றை போற்றுவோம்
யுத்த மின்றி அமைதியுடன்
வாழ்ந்து நாமும் காட்டுவோம்
எட்டுத்திக்கும் எழுந்து நிற்கும்
தேர்ந் தெடுத்த மந்திரம்
ஏழைக்குரலும் ஏற்றம் காணும்
காந்தியத்தில் சாத்தியம்...

மேலும்

நன்றி ஐயா. 16-Oct-2018 12:39 pm
நன்றி ஐயா. 16-Oct-2018 12:38 pm
அருமை , வாழ்த்துக்கள் 15-Oct-2018 10:26 am
அருமை 16-Aug-2018 6:07 pm
T. Joseph Julius - சகி அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

இது மஹாத்மா காந்தி பிறந்தநாள் கவிதை போட்டி .
கவிதை 15 வரிகளுக்கு மிகாமல் அல்லது 50 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் .
இதுவரை வெளிவராத ,சொந்த படைப்பாக மட்டுமே இருக்க வேண்டும் ,
தமிழில் மட்டுமே இருக்கவேண்டும் ,.
போட்டிகள் குறித்த முடிவு, விதிமுறைகள் போட்டி நடத்துபவர் இறுதி செய்வார். போட்டி குறித்தோ , முடிவு குறித்தோ மாற்ற போட்டியாளருக்கு முழு உரிமை உண்டு .
இது அதிர்ஷ்ட போட்டி அல்ல,. சிறந்த படைப்பை அளிக்கும் ஒருவருக்கு மட்டுமே பரிசு .
ஒருவர் ஒரு படைப்பை மட்டுமே அளிக்கமுடியும் .
தங்கள் படைப்பு குறித்து வேறு எவரேனும் உரிமை கோரினால் ,. நீங்களே பொறுப்பு. போட்டி நடத்துபவர் பொறுப

மேலும்

தங்கள் சேமிப்பு வங்கி கணக்கு எண்ணை அனுப்புங்கள் . 05-Oct-2018 6:03 pm
மிக்க மகிழ்ச்சி... நன்றி அனைவருக்கும்.... 05-Oct-2018 2:27 pm
அனைவர்க்கும் வாழ்த்துக்கள் . என்னை தேர்வு செய்தமைக்கு நன்றி 05-Oct-2018 10:19 am
100 % விதிமுறைகளுக்கு பொருந்தாவிட்டாலும், தலைப்பின் அடிப்படையில் , கவிதை நடையின் அடிப்படையில் கருத்துக்களோடு பொருந்திய 3 படைப்புக்கள் தேர்தெடுக்கப்பட்டு ஊக்கிவிக்கப்பட்டது .இது ஒரு சிறு ஊக்கம் மட்டுமே .... தங்கள் கருத்துக்கு நன்றி . 04-Oct-2018 6:23 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (184)

சகி

சகி

பிறந்த,சிதம்பரம்,வசி,சென்
பெருவை கிபார்த்தசாரதி

பெருவை கிபார்த்தசாரதி

கலைஞர் நகர், சென்னை-78
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்

இவர் பின்தொடர்பவர்கள் (184)

இவரை பின்தொடர்பவர்கள் (184)

radhabcom.c

radhabcom.c

padikasuvaithpatty
Danisha

Danisha

Chennai

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே