காந்தியத்தின் சாத்தியம், இப்பொழுதும் எப்பொழுதும்

வெள்ளைக்கார கூட்டமொன்றை
வேர்பிடுங்க வந்தது
வெல்லுகின்ற வழியை நமக்கு
சொல்லி அன்பை தந்தது
வில்லும் அம்பும் இன்றியிங்கு
வீறு கொண்டு நின்றது
வீழ்ச்சி யின்றி சூழ்ச்சியின்றி
வெற்றி பல கண்டது
கத்தி யின்றி விடுதலையை
பெற்ற வொன்றை போற்றுவோம்
யுத்த மின்றி அமைதியுடன்
வாழ்ந்து நாமும் காட்டுவோம்
எட்டுத்திக்கும் எழுந்து நிற்கும்
தேர்ந் தெடுத்த மந்திரம்
ஏழைக்குரலும் ஏற்றம் காணும்
காந்தியத்தில் சாத்தியம்...

எழுதியவர் : பாலமுருகன் கணபதி (16-Aug-18, 1:42 pm)
சேர்த்தது : பாலமுருகன் கணபதி
பார்வை : 462

மேலே