உறவுகள்
உறவுகள் வாழ்க்கையின்
வலிமை
ஏற்றத்தில் பொறாமை படும்
உறவுகளும் வேண்டும்
தடுமாறும் போது கை பிடிக்கும்
உறவுகளும் வேண்டும்
கண்ணீர் துளிகளை தரும்
உறவுகளும் வேண்டும்
கண்ணீரே வராமல் பார்த்துக்கொள்ளும் உறவுகளும்
வேண்டும்
என் இறுதி ஊர்வலத்தில் நான்
இல்லா சுற்றிலும் அனைத்து
உறவுகளும் வேண்டும்