பாச வலை பாச விலை

பாசத்தின் விலை பாவத்தின் சுமையாகுது;
பாசவலைகட்டிய வீட்டில் பாசம் விலைபோகுது;
பரிதாவப்பட இதயம் இல்லாம போச்சி;
பாவப்பட்ட பூமியிலே காசுபணம்
அண்ணன் தம்பி உறவுகளும் தடுமாறுது.
பாசத்தின் விலை பாவத்தின் விலையா போகுது;
தன்னலம் சுயநலம் இப்போ தள்ளியே நிற்கவே விரும்புது;
விசுவாசம் இப்போ விசமமா மாறுது.

இயந்திர உலகில் இதயம் இப்போ இரும்பாய் இறுகிபோச்சி;
சுவையான சொந்தங்களே சுமையாக போச்சி;
பெத்த பிள்ளைகள் இப்போ சொத்தபுள்ளைகளா போச்சு;
சொத்து சுகத்தையே பெரிதாய் நினைத்து
பாச வலையிப்போ பாவவலையா போச்சி.

அம்மானு கூப்பிட்ட வாய் இப்போ
அம்போனு விட்டு விடவே முணுமுணுக்குது;
அன்பே இப்போ வம்பாய் மாறிபோச்சி;
பெத்த பிள்ளைகளே பெற்றோர்களை சுமையா நினைக்கிது;
சுகமாய் வாழ பெற்றோர்கள் சொத்தைவித்து தின்ன நினைக்கிது.
பிடிவாதம் பிடித்தே வயோதிக காலத்தில்
பெற்றோர்களை சுமையா நினைத்து ஒதுக்கி வைக்கவே
போட்டி போடுது;
முதியோர் இல்லத்தின் முகவரியத்தேடுது;
முந்திக்கிட்டு போனாவே நல்லது என நனைக்கிது;
பாசம்யிங்கே பாஷானம் ஆகுது.
பாச வலை இங்கே தூக்கு கயிறா மாறுது;
தூக்கி வளர்த்த பிள்ளைகள் இப்போ தூரநின்று பார்க்காவிட்டாலும் துரத்தியடிக்கவே பார்க்குது;
ஆதாயம் தேடும் உலகிலே அம்மாவும் அப்பனும்
அந்நியனா பார்க்கும் காலம் பொறந்துடிச்சி;
அய்யய்யோனு இரக்கம் பார்க்க வளர்த்த நாயத்தவிரே
நாதியில்லாம போச்சி;

பாசத்தின் விலை இப்போ பாவத்தின் விலையா மாறுது;
பாச வலை இப்போ
எமன் கையில் இருக்கும் பாசக்கயிறா மாறிபோச்சி.

நேசமே நீ ஏன் நேசிக்காது நெருடி நாசமாகின்றாய்;
பாசமே நீ ஏன் பாய்விரிக்காது பாய்கின்றாய்,
பாவமூட்டையை சுமக்க நினைக்கின்றாய்;
சோகமே நீ ஏன் சொந்தம் ஆகின்றாய்;
அன்பே நீ ஏன் அன்யோன்யிமாக இருக்காது
அந்நியமாகின்றாய்
ஆட்டிப் படைக்கின்றாய்;
காதலே நீ ஏன் கனியாது கதறுகின்றாய்;
உறவே நீ ஏன் உறவாட மறுத்து,ஓடுகின்றாய்;
கருணையே நீயேன் உருகாது, கருகுகின்றாய்;
விசுவாசமே நீ ஏன் வீம்பு பிடிக்கின்றாய்; விக்ஷக்கிருமியா கின்றாய்;
பற்றே நீ ஏன் பற்றி படராது,
பற்றி எரிகின்றாய்
பாச வலை பாவத்தின் விலையா வேண்டாம்.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (26-Dec-24, 8:04 pm)
பார்வை : 63

மேலே